கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 15, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

செங்கோட்டை பாசஞ்சர்

 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் கலெக்டர் கொடி அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. சமயங்களில் இப்படித்தான் எல்லாம் சொல்லிவைத்தபடி நிகழ்ந்துவிடுகிறது. ஆல்வின் சொன்ன வார்த்தைகள் என்று இல்லை… இன்று நான் இந்த ரயிலில் பயணப்பட வேண்டும் என முடிவெடுத்ததும், என் அருகே ஆல்வின் வந்து அமர்ந்ததும்கூட அப்படித்தான். ‘செங்கோட்டை பாசஞ்சர் இன்னைக்கித்தான் கடைசி நாள். அந்த


ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

 

 அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம் நேதாஜி சாலையில் யூனிஃபார்ம் அணிந்த மாணவ – மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கூடம் நோக்கி விரைவார்கள். எதிரே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள், ஆடுகள், நாய்களைச் சிகிச்சைக்காக அழைத்துவந்திருப்பார்கள். உள்ளே போதுமான இடம் இல்லாத காரணத்தால் வெளியே நிற்க வைத்திருப்பார்கள். வொர்க்ஷாப் வாசலில் இருக்கும் டீக்கடை மாரிமுத்து இவரைப் பார்த்த நிமிடத்தில் டீ கிளாஸை வெந்நீரில் ஊறப்போடுவார்.