கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 7, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுதுளி

 

 திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது. நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான் அனுபவிக்கப் போகிறார்களோ? ஆதாம் ஏவாளின் பாவம் மனித இனத்தையே பற்றியதுபோல புலம்பெயர்ந்த தமிழரின் செயல் அவர்களின் சந்ததியையே பயமுறுத்தப்போகிறதா? “அப்பா…!” என்று கூவியவாறு கையில் ஒரு கடதாசியுடன் ஓடிவந்தாள் சர்மிளா. பத்து வயது. என்னுடைய செல்ல மகள். இரண்டு பொடியங்களுக்குப் பிறகு பிறந்த பெட்டைப்பிள்ளை. அதனால் செல்லம் கொஞ்சம்கூட. பிள்ளைகளைத் தடியெடுத்து அதட்டினால் அவர்கள் தாழ்வு


கருகிய மொட்டுக்கள்!

 

 “கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம். அதுதான் இது!” என்று புதிர்போட்டாள். யோசித்தேன். விடை தெரியவில்லை. “தெரியாது… சொல்லடி!” என்று கெஞ்சினேன். கதவைத் திறந்து புன்னகையுடன் வரவேற்றவளைப் பார்த்துப் பிரமித்துவிட்டேன். எவ்வளவு மாறிவிட்டாள். கடைசியாக இவளைச் சந்தித்துப் பத்து வருடங்களாவது இருக்கும். அன்று நாற்றுமேடையாக இருந்த நிலம் பூவும் பிஞ்சும் காய்களும் கனிகளும் விளைந்த தோட்டமாகியது. பெரிய மனுசியாகிவிட்டாள். கன்னக்கதுப்புகளில் திரண்ட தசைகளில்கூட


இதற்காக இவைகளை..!!

 

 “செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?” “உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே…. நாய் குட்டி போட்டூட்டுதே…. மாட்டிலை எத்தினை போத்தில் பால் கறக்கிறியள் எண்ட கதைதான்” என்று சலிப்புடன் கூறினார் செல்லமக்கா. “செல்லமக்கா…. வீட்டிலை என்னவாலும் பிரச்சினை கிரச்சினையே? சள்புள்ளெண்டு விழூறியள். நாய் குட்டிபோட்டால் கவனமாய்ப் பாருங்கோ…. பிறக்கிற குட்டியளிலை ஒண்டுக்கு வீரன் எண்டு பேர் வையுங்கோ….” “செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?” “உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு


பாதை தெரியாத பயணங்கள்!

 

 “என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?” என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. “ஆள் “றெயினா”லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்….” என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன். ஜேர்மனிக்கு வந்து


ஐயாயிரம் மார்க் அம்மா!

 

 “மனம் ஒரு குரங்கு… மனித மனம் ஒரு குரங்கு…” சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய “ரேப் றெக்கோட”ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள் ஈடுபட்டிருந்தன. வீதியின் இருமருங்காலும் பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசமில்லாமல் மக்கள் தமது அன்றாட அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருந்தார்கள். “ட்ராம்”