கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 6, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

பாதிப்பு

 

 சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் சிறீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை நடாத்துவதுபோல. ஒருவருக்குச் சந்தோசமானபோது மற்றொருவர் கஸ்டப்படுவது இயற்கைதானே?! எப்படியாவது கொதிக்கும் வெய்யிலில் கால் உழையக் காத்து நின்றாவது அரிசியை வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்ற உறுதியுடன் அந்த மக்கள் கையில் வியர்வையால் பிசுபிசுக்கும் கசங்கிப்போன சில முத்திரைகளுடனும் உர “வாய்க்”குகளுடனும் காத்திருந்தார்கள். வயிற்றில் பசி. சூட்டாலும் பசியாலும் கைக்குழந்தைகள் சில தாய்மாரின் மார்புச் சேலைக்குள் முகம்புதைத்து அழுதன.


விசவித்துக்கள்…!

 

 கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறேன். போனால் போய்க்கொண்டே இருக்கலாம். எதுவுமே தென்படாத நிலையில் அர்த்தமற்று அலைவதில் என்ன பயன்?! நின்று நிதானித்து என்னைச் சுற்றி வரிக்க முற்படும் அந்தச் சூன்யத்தை அவதானிக்கலாமா என்று எண்ணுகையில்…. வெகு தொலைவில்


யாகாவாராயினும் நாகாக்க!

 

 எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி கேட்கும்போது அலட்சியத்துடன் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக வந்துபோகிறார்கள். “ஏதாவது உதவி தேவையா?” என்ற பாவனையில் விசாரித்துச் செல்கிறார்கள். அவர்களது செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அரைகுறையாகவாவது அவதானிக்க முடிகிறது. வியப்பாக இருக்கிறது. அவர்களைப்பற்றி அவள் தனக்குள் போட்டுத் தீர்மானித்த முடிவுகள் யாவும் அங்கே தடுமாறி, அவர்களின் புதிய முகங்களைத் தரிசிக்க நேரும் விந்தைகள் யாவும் புதியனவாக


விலங்கு மனத்தால்

 

 தொலைபேசி இடைவிடாமல் அடித்தபடி இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம் என்ற நினைப்புடன் விழித்து எழுந்து கொண்டான் ராகவன். பகல் எல்லாம் பட்ட அலைச்சல் உடம்பை முறித்துப் போட்டு விட்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் மணி இரண்டு இருபது. “கனநேரமா ரெலிபோன் அடிக்குது. ஒருக்கா ‘போனை’ எடுங்களேன்” போர்வை க்குள்ளிருந்து மனைவி தேவகி முனகினாள். ராகவனின் கைகள் சுயமாகத் தொலை பேசியின் ரிசிவரைத் தேடியது. “ஹலோ! யார் கதைக்கிறது?” “அது நான். நான், பரணி!” “பரணியா? அது யார் பரணி?


பக்ஷிகளின் தேசம்

 

 ஆற்றங்கரையில் அன்று அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சகோதரர்கள் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான நிலத்தில் உழைத்து களைத்து களித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள் வழிபடுவதெற்கென எந்த தெய்வத்தையும் அவர்களின் முன்னோர்கள் கை காட்டிச் செல்லவில்லை. இப்படியாக இருந்த காலத்தில் வடக்கிருந்து வீசிய காற்றில் சில விஷப் பக்ஷிகள் அங்கே பறந்து வந்தன. முன் நெற்றியில் சிறு கோடுகளும் கூறிய மூக்கும் கொண்ட அப்பறவைகள் நோட்டம் விட்டன.ஆங்காங்கே இருந்த குன்றுகளின் மீது அமர்ந்து கொண்டன