கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 5, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

பணம் காய்க்கும் இளஞ்செடிகள்

 

  நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயதுச் சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பவன்.உடை அணிந்து சாப்பிடுவதற்காக வந்தவன் டேபிளைப் பார்த்தான். மெத்து மெத்தென்ற ஆப்பமும்,தேங்காய்ப்பாலும் எடுத்துவைக்கப்பட்டிருந்தது. தக்காளிச் சட்னி பக்கத்தில் இருந்தது , எல்லாமே இவனுக்குப் பிடித்த ஐட்டம் , சரியான பசி வேறு .நாக்கைச் சப்புக்கொட்டியபடி சாப்பிடப்போனவனை அம்மாவின் குரல் தடுத்தது. “நிதின் கண்ணா அது உனக்கில்லடா செல்லம் , அதெல்லாம் சாப்பிட்டா ஒடம்பு


சமையல் யாகத்தின் பலியாடு

 

 காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில் செல்ல அடுப்போடு கூடிய புகைபோக்கி. அதுவே விலை இருபதாயிரம் ரூபாயாமே? எப்படியோ அவருக்கு எல்லாமே வசதியாக இருந்தது. இதையெல்லாம் வைத்து அவரை பெரிய பணக்காரி என்று நீங்களாக முடிவு செய்துவிட வேண்டாம். ஒரு மிகப் பெரிய வியாபாரக் குடும்பத்தின் ஏழைச் சமையற்காரி தான் அவர். ஆச்சி என்றதும் செட்டிநாட்டைச் சேர்ந்தவர் என்று