கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 2, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புத் தப்பாய் ஒரு கல்யாணம்

 

 ஆபீஸ் ப்யூன் மாணிக்கம் வீட்டைத்தேடி வந்து ஒரு சின்ன குறிப்புச் சீட்டை என்னிடம் நீட்டிய போது விடியற்காலை ஐந்து மணி. கொசப்பாளையம், புத்திரகாமாட்சியம்மன் கோவிலுக்கு காலை ஏழு மணிக்குள் போ. போய் கவர் பண்ணு. எடிட்டர் “அங்க அப்பிடி என்னவாம்யா?” அவன் உதட்டைப் பிதுக்கினான். இரண்டு கோனிக்கா ரோலை பையில் போட்டுக்கொண்டு, என் யாஷிக்காஎஸ்.எல்.ஆர். ஜூம்மை தூக்கிக்கொண்டு ஓடினேன். பாவி..பாவி…இதை நேத்திக்கே சொல்லியிருக்கலாமில்ல?. லாஸ்ட் மினிட்ல சொல்லி ஹும்! எப்ப குளிச்சி, எப்ப சாப்பிட்டு? அடச்சே! என்னை


ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….!

 

 மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது மிஸ் பண்ணாம அனுபவிக்கனும்’ இதோடு விட்டுட்டா எப்ப கிடைக்குமோ? திருமணத்திற்கு முன் எவ்வளவு ஜாலியாக இருந்தேன், இந்த கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் போச்சி. எமகாதகி விட மாட்டா. காட்டு கத்தலா கத்தி என் மானத்தை வாங்கிடுவா. பிள்ளைங்க ரெண்டு பெத்தாச்சு அதுங்க உங்களை பார்த்து கெட்டழியனுமான்னு.. ரகளை பண்ணிடுவா. பாரதியாம்.. பாரதி மீசை வைக்காத


இது நிஜமா…?

 

 நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது. நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா ஹாலில் மெதுவாக நடந்து பாட்டி ரூமிற்கு போவதை பார்த்து அதிர்ந்தான். அறைக்குள் தாத்தாவும், பாட்டியும் பேசி கொண்டது தெளிவாக கேட்டது. பாட்டி அழுது கொண்டிருந்தாள். சுந்தருக்கு வியர்த்தது.. தாத்தா இறந்து ஒரு வாரமாகிவிட்டது. மனசுக்குள் கிலி பரவியது. மெல்ல அறைக்குள் திரும்பி அப்பாவை எழுப்பினான்… “ அப்பா..” கை கால் நடுங்க உதற தாத்தா நடந்து


சொல்ல மறந்த கதை…

 

 பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ, டிபன் சாப்பிடறவங்க எல்லாம் இங்க முடிச்சிக்கலாம்… வண்டி இங்க இருபது நிமிஷம் நிக்கும்…” கண்டக்ட்டர் குரல் கொடுத்தார். அதுவரை மில்டனின் கவிதைகளில் மூழ்கியிருந்த ருத்ரா புத்தகத்தை மூடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஹோட்டல் ஒன்றும் ஹைஜீனிக்காக தெரியவில்லை.. பசிக்கு பிஸ்கெட் டீ மட்டும் எடுத்து கொண்டு ஒரு வழியாக கோவை போய் சாப்பிடலாமா என யோசித்தான்


பட்டாம் பூச்சிகள்

 

 விடிந்து வெளிச்சம் பரவியது கூட தெரியாமல் அசந்து விட்டிருக்கிறோமே என்று சுசீலா பதட்டுத்துடன் எழ, “ என்னமா பசங்கதான் இல்லியே.. நிதானமா எழுந்துக்கோ.. மெதுவா டிபன் செய்தா போதும்..” என்றார் சிவம். இந் நேரம் பிள்ளைகளுக்கு ஸ்கூல் நேரமாக இருந்தால் ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொள்ளாத குறைதான் ஆளாளுக்கு பறந்து பறந்து வேலை செய்ய வேண்டி வரும். பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விட்டாயிற்று. மருமகள் அனிதாவும் ஆசிரியை என்பதால் விடுமுறையில் பிள்ளைகளை அழைத்து கொண்டு அம்மா