கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பனைத் தேடி…

 

 தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு “மாண்புமிகு’க்கள். வழுக்கையும் தொந்தியும் பெரும்பாலானோரை அலங்கரித்திருந்தாலும் ஒரு முகம் மட்டும் தொலைக்காட்சித் திரையில் அதிக பரிச்சயத்தைக் காட்டியது. மனதில் லேசான உறுத்தல். வாசன் பெயர் பட்டியலைத் தேடினார். அப்படி இருக்கலாமோ…? இளவழகன், மலைநம்பி, மறைமதி, அருட்செல்வம்…பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. அவர் எதிர்பார்த்த “ராமசுப்பு’ என்கின்ற அந்த இராம சுப்பிரமணியன் ஏதாவது தூய தமிழ்ப் பெயர் ஒன்றில்


மனசுக்குள் ஓரு மணிமண்டபம்

 

 அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும் இல்லாமல் வழக்கம் போல் கடையை விரிக்க ஆரம்பித்தாள் ராமாத்தாள் பாட்டி. மணி எட்டாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் வரத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் வருவதற்குள் மிட்டாய் பாட்டில்களை எல்லாம் எடுத்து வைத்தாக வேண்டும். கடை என்றால் ஒரு நரம்புக் கட்டில்தான், கடை. வியாபாரம் முடிந்ததும் மடக்கிக் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். ஒன்பது மணிக்கு பள்ளிக்கூட மணி


வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்

 

 நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது. நிலவறை இருண்டு கிடந்தது. கொஞ்ச நஞ்சம் பரவியிருந்த வெளிச்சத்தையும் வெடிகுண்டுகளின் கரும்புகை அள்ளிக் கொண்டு போய்விட்டது. சூரிய ஒளியே தெரியவில்லை. அந்த நிலவறைக்குள்ளும் புகையின் வாடை. கண்கள் எரிவது போல் இருந்தன அவளுக்கு. ஆனால் எதுவும் நடக்காததுபோல் மெüனமாகக் கண்களை மூடி தவம் செய்கிற துறவி போல் இருந்தான் சாந்தன். காதே வெடிக்கிற சத்தம் அவனை


இதுகூடத் தெரியல

 

 எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி விரல் நுனியில் தொட்டுத் தொட்டு கப்பக் கிழங்கினைப் பகிர்ந்து தின்று கொண்டிருந்தான் ஜெயபால். “”ஏன்டா உங்கத்த மாமாவெல்லாம் எங்கடா இருக்காங்க. ஏன்டா இங்க ஒரு வருசத்துக்கு ஒருவாட்டிதான் வாறாங்க” “”எங்கத்தை ரொம்ப தூரத்துல இருக்காங்க” என்று தன்னுடைய கழுத்தை வளைத்துத் தூரத்தின் அளவை அதிகப்படுத்திக் காட்டினான் ஜெயபால். “”இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவாங்களே. எனக்கு ரொட்டி,


ஒற்றைப் பனை

 

 பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது வனவாசம். நான் போனது பண வாசம். சொந்த ஊரில் பஞ்சாயத்துப் பள்ளியில்தான் படிப்பு என்றாலும் நகரத்தில் அமைந்த கல்லூரிப் படிப்பும் கிடைத்த வேலையும் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போட்டன. பொறியியல் படிக்க ஹாஸ்டலில் சேர்ந்தபோதே சொந்த ஊரோடு இருந்த உறவுச் சங்கிலி அறுந்து போக ஆரம்பித்திருக்க வேண்டும். அதன் பின் நகரத்தில் கிடைத்த வேலை, சென்னை