கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

குச்சி மனிதன்

 

 முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது. “”ஹலோ மிஸ்டர்! முன்பின் தெரியாத ஆளை இப்படி அடிக்கலா….” – சொல்லி முடிக்கவில்லை. அவனைத் தெரிந்துவிட்டது. “”டேய் பாலு! வாட் எ சர்ப்ரைஸ்! எப்படிடா இருக்க?”. பாலு என் பால்ய நண்பன். பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன். இருவரும் அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம். ஸ்டைலாக உடை அணிந்திருந்தான்.மெல்லிய உயர் ரக சென்ட் வாசனை அவனைச்


இங்கிதம்

 

 நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை கண்டவுடன் கையைக் காட்டினேன். நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். உட்கார்ந்து பயணிக்க இடமில்லை. சிலர் ஏற்கெனவே நின்று கொண்டுதான் வந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளுக்கே உண்டான அலைச்சல். அதிலும் நான் நுகர்பொருள் விற்பனை பிரதிநிதி. சொல்லவா வேண்டும் அலைச்சலுக்கு. கடை கடையாக ஏறி இறங்கியதால் கால்கள் சோர்ந்து வலித்தன. மிகுந்த களைப்பாக இருந்தேன். மதியம் மூன்று மணி வெயில்


பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

 

 அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து கிளம்பியதும் மெல்ல வந்து முகத்தைத் தொட்ட காற்று, ஏதோ அன்னையின் வருடலைப் போல இருந்தது. “”டிக்கெட்டும்மா…” என்று ஏற்கெனவே கிழித்து வைத்திருந்த பயணச் சீட்டை, பழகிய நடத்துநர் ஒரு புன்னகையுடன் நீட்டினார். “”தாங்ஸ் சார்…” என்று சரியான தொகையைக் கொடுத்தாள். புன்சிரித்தாள். “”நேற்று தவற விட்டுட்டீங்களாம்மா நம்ம பஸ்சை?” “”ஆமாம் சார்! கிளம்புற நேரத்துல மச்சினரும்


ரயில் பெஞ்சு

 

 கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில் பெஞ்சுக்கு சரியாக 5 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அவர் ஒரு ரிட்டயர்டு முனிசிபல் கமிஷனர். அவருடைய ரயில்பெஞ்சு நண்பர்களில் மிகவும் தாமதமாக வருகிறவர்களை “”ஏன் லேட்டு?” என்று கேட்காமல் இருக்கமாட்டார். அவர் அதிகாரியாக இருந்தபோது கீழே வேலை பார்த்தவர்களை இப்படிக் கேட்டுக் கேட்டு அந்தப் பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது. அவர்


சிவப்புப் பட்டுக் கயிறு

 

 பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போக வேண்டாம். அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது. வெய்யில் நாளில்