கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

நடுப்பகல் விளக்கு

 

 1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து போயின. தாவரங்களில் வேர்ப்பிடிப்பு இல்லாததால், காற்று வீசும்போது பூமியின் மேற்பரப்பு மண் அரிக்கப்பட்டு புழுதிப் புயலாக வீசும். புழுதிப் புயலால் விவசாயமும், மனித வாழ்க்கையும் மிகப்பெரிய கேள்விக்குறியானது. புழுதிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் “புழுதிக் கிண்ணம்’ என அழைக்கப்பட்டன. விவசாயிகள் உயிர் வாழ்வதற்காக மிகப்பெரிய அளவில் கலிபோர்னியாவை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதனால் கலிபோர்னியாவிலும் உணவு மற்றும்


ஜெயந்தின் பொம்மை

 

 ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?” ஜெயந்த் திடீரென விழித்தெழுந்தவன் போல் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சொன்னான். “”நோ. எதுவும் இல்லை. நான் நன்றாகத்தானிருக்கிறேன். இந்த இடம் உண்மையிலேயே அழகாக இருக்கிறது” “”இதற்கு முன் நீ இங்கு வந்திருக்கிறாயா? இந்த இடம் அருமையான இடமென்பது உனக்குத் தெரியுமா?” “”ஏறக்குறைய மறந்துவிட்டது. சில சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. இந்த பங்களாவின் தோற்றம் மாறவே இல்லை. இந்த


குச்சி மனிதன்

 

 முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது. “”ஹலோ மிஸ்டர்! முன்பின் தெரியாத ஆளை இப்படி அடிக்கலா….” – சொல்லி முடிக்கவில்லை. அவனைத் தெரிந்துவிட்டது. “”டேய் பாலு! வாட் எ சர்ப்ரைஸ்! எப்படிடா இருக்க?”. பாலு என் பால்ய நண்பன். பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன். இருவரும் அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம். ஸ்டைலாக உடை அணிந்திருந்தான்.மெல்லிய உயர் ரக சென்ட் வாசனை அவனைச்


இங்கிதம்

 

 நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை கண்டவுடன் கையைக் காட்டினேன். நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். உட்கார்ந்து பயணிக்க இடமில்லை. சிலர் ஏற்கெனவே நின்று கொண்டுதான் வந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளுக்கே உண்டான அலைச்சல். அதிலும் நான் நுகர்பொருள் விற்பனை பிரதிநிதி. சொல்லவா வேண்டும் அலைச்சலுக்கு. கடை கடையாக ஏறி இறங்கியதால் கால்கள் சோர்ந்து வலித்தன. மிகுந்த களைப்பாக இருந்தேன். மதியம் மூன்று மணி வெயில்


பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

 

 அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து கிளம்பியதும் மெல்ல வந்து முகத்தைத் தொட்ட காற்று, ஏதோ அன்னையின் வருடலைப் போல இருந்தது. “”டிக்கெட்டும்மா…” என்று ஏற்கெனவே கிழித்து வைத்திருந்த பயணச் சீட்டை, பழகிய நடத்துநர் ஒரு புன்னகையுடன் நீட்டினார். “”தாங்ஸ் சார்…” என்று சரியான தொகையைக் கொடுத்தாள். புன்சிரித்தாள். “”நேற்று தவற விட்டுட்டீங்களாம்மா நம்ம பஸ்சை?” “”ஆமாம் சார்! கிளம்புற நேரத்துல மச்சினரும்