கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

புதுமைப்பெண்களடி!

 

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ வாங்கிக் குடித்துக் கொண்டு சாலை போடும் தொழிலாளர்களை விரட்டிக் கொண்டிருந்தான். பத்து லட்ச ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிஞ்சிப் போனால் ஏழு லட்சம் தான் செலவாகும். பாக்கி மூன்று லட்சம் அரசுப் பணத்தில், யூனியன் சேர்மனுக்கு ஒரு லட்சம். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு தலா ஐந்தாயிரம் போக ஒன்றரை தேறும். பஞ்சாயத்துத்


கோயில்

 

 நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும் வருகிறது; இதில் புது சந்நதி வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். பேங்கில் போடவும் கூடாது என்கிறார். கமிட்டி உறுப்பினர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. “”போதும், போதும், இதுக்கு மேலே இந்தக் கோயிலுக்குச் செலவு செய்ய வேண்டாம்” என்றார். “”ஏன், ஏன்யா இப்படிச் சொல்றீங்க” என்றார் நாயுடு. நரசிம்மாச்சாரியார் சற்றே தயங்கினவர்போல ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.


செல்வி

 

 “ம்ம்மே ஏ ஏ…’ தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு குரல் கொடுத்தது. கல்லூரிக்குப் போயிருந்த தாமரை அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த புத்தகத்தையும் டிபன் பாக்ûஸயும் மேஜை மீது வைத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றாள். சாதாரணமாக, அவள் தன்னை பார்க்க வருவதற்குள் இந்நேரம் நான்கு தடவைகளாவது குரல் கொடுத்திருக்கும் அது. ஆனால் இப்போதோ அதாவது கடந்த பத்து நாட்களாகவே சோகமாக இருக்கிறது. சரியாகப் புல் தின்பதில்லை. எதையோ


அப்பாவும் தண்ணீரும்…

 

 எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒரு மரணத்தின் முன் அவை நிற்பதில்லை. அதிலும் அப்பாவோடு என்னும்போது மனஸ்தாபங்கள் எளிதில் பின்னுக்குப் போய்விடும் என்பதில் ஐயமில்லை. இன்று நான் அழுது நின்றாலும், வாழ்ந்த நாள்களில் அப்பாவுக்கும், எனக்கும் இடையே இதமான சம்பவங்கள் என்பது குறைவு. சச்சரவுகளே அதிகம். நான் ஒழுங்காகப் படிக்காதபோது, வகுப்பிற்கு “கட்’ அடித்து மாட்டியபோது, எனது கல்லூரி சேர்க்கைக்காக


இன்னும் போகாமல் இருந்துகொண்டு…

 

 பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ? ரவி வீட்டில் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது. வராண்டாவில் தாத்தாவைக் காணவில்லை. கொல்லையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டும் கேட்டது. கொண்டு வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு ரவி கொல்லைக்குச் சென்றான். அம்மா அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். ரவி வந்ததை அவள் கவனிக்கவேயில்லை. ரவி மெதுவாக “அம்மா’ என்றான். ரவியைப் பார்த்தவுடன் அவள்