கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் வருவாளா?

 

 அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எங்களுக்குள் சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அதை நாங்கள் பெரிது படுத்தவில்லை. அன்று நான் அப்படி நடந்திருக்கக் கூடாதுதான். என்ன செய்வது ஆத்திரத்தில் எழுந்த முன்கோபம் என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டது. ஒன்றுமே இல்லாத விடையத்திற்கெல்லாம் கொஞ்ச நாட்களாகவே நாங்கள் முரண்டு பட்டுக் கொண்டிருந்தோம். ஒரு நாளுமே யாருக்கும் நான் கைநீட்டியதில்லை. ஒரு விநாடி தாமதித்திருந்தால்கூட அதைத் தவிர்த்திருக்கலாம். கைநீட்டக் கூடிய மாதிரி அன்று


மீளவிழியில் மிதந்த கவிதை..!

 

 மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமோ? மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது. எவ்வளவு லாவகமாய் அவள் என்னைக்கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை


உள்ளுக்குள் ஈரம்

 

 தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ? 80 லட்ச காண்ட்ராக்ட் கைவசம் வந்து விட்டதே ! வேலையை முடிக்கும் போது கிட்டத்தட்ட 20 லட்சம் கையில் பார்த்து விடலாம். அதுவும் கடுமையான போட்டிக்கு இடையே அந்த காண்ட்ராக்டை பிடிப்பது என்றால் சும்மாவா ? அன்றைக்கு டிரைவர் இல்லாததால் அவரே காரை எடுத்தார். பேக்டரி வாசலைத் தாண்டி 50 மீட்டர் கூட போயிருக்க மாட்டார்.


குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி

 

 இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய் கடைசியில் முயற்சியைக் கைவிட்ட பிறகு ஞாபகம் வந்து தொலைக்கும். ஆனால் பாட்டியை முதன்முதலாகப் பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கிறேன் (அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பா?). நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த இடத்தின் பெயர் ஹெல்த் கேம்ப். வெள்ளைக்காரர்களோ அல்லது அவர்களது இந்திய குமாஸ்தாக்களோ வைத்த பெயர். பசும்புல் நிறைந்த மேட்டுப்பகுதி. தாசில்தார் சிரஸ்தார்


குட்டச்சி

 

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்; சாப்பிட வாருங்கள்’ ஒலிப்பெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். அழைப்பு விடுத்த நேரம் நண்பகல் இரண்டு மணி. குடிசைக்குள் முடங்கிக் கிடந்த குட்டச்சி எழுந்து கொண்டாள். நாக்கின் சுவை மொட்டுகள் ருசியான பதார்த்தங்களுக்காக ஏங்கின. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவதை தவிர, அவளால் வேறொன்றையும் செய்ய முடியாத நிலை. ஊர் ஜனமான சொந்த பந்தங்கள்