கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதர்கள்

 

  சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால தாமதமாக ஓடிவந்து பயணிகள் சிலர் தங்கள் பெட்டிகளைப் பார்த்து அவசரம் அவசரமாக ஏறிக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்தவர்களை வழியனுப்ப வந்திருந்த உறவுக்காரர்களும் நண்பர்களும் நடைபாதையை நிறைத்துக் கொண்டு நின்று அவசரமாய் ஓடி வந்து ஏற முயற்சித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலைத் தந்தனர். “ப்ளீஸ்… கொஞ்சம் வழிவிடுங்க… வழி விடுங்க’ என்று கெஞ்சிக் கெரவி


அம்மா புத்திசாலிதான்…

 

 அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை…” கார்த்திக்கை உற்றுப் பார்த்தாள் பார்வதி. “புரியாமல் பேசுகிறான் ‘ பதவி உயர்வு முக்கியமானது, குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு. அதுவும் பதவி ஓய்வுக்கு முன்பு வரும் கடைசி உயர்வு விசேஷமானது. ஆனால் அவள் அளவில் அது குடும்பப் பிரச்னையாகியுள்ளது. “”நீங்க பின் வாங்காதீங்கம்மா…. அப்பாவுக்குக் கஷ்டமா இருக்கும்தான். அதுக்கென்ன பண்றது? நீங்க சீனியர். அதிகார


கல்லும் கனியாகும்…

 

 இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள் சுருளான முடிக்கற்றை இமைகளை வருடிக் கொடுப்பதுபோல் ஒரு சுகம். அந்த மூன்றாம் மாடி அறைச் சன்னல் வழியே மெல்ல மெல்ல நுழைந்த பூங்காற்று ஜுனைதாவின் தங்க நிற மேனியின் ஸ்பரிசத்தை விரும்பியதுபோல் அவள் உடலை லேசாய்த் தடவிக் கொண்டிருந்தது. எங்கே இன்னும் இக்பாலைக் காணோம்? “”பாம்… பாம்” அடடே.. அவனுக்கு வயது நூறு. இதோ அவனது


தீர்ப்பு

 

 பாபு செத்துப்போய் இரண்டு மாசம் முடிஞ்சுப் போச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை ஆக்கிப் படைச்சு மூணாம் மாசம் கும்பிட்டுட்டு அப்படியே அவம் பொண்டாட்டிய என்ன பண்ணலாம்னு முடிவு கட்டணும், வந்துடுடா” – இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சித்தப்பா தொலைபேசியில் என்னை விளித்திருந்தார். கிராமங்களில் இருந்து வரும் அழைப்புகள் எப்பொழுதுமே எனக்குப் பிரியமானவைகளாக இருக்கும். கிராமத்துக் கதைகளை யாராவது பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் கூட சூழல் மறந்து மனக்கிளர்ச்சியுடன் அவற்றை கேட்டுக் கொண்டிருப்பேன். ஆதலினால் திருவிழா, கல்யாணம், கருமாதி போன்ற எந்த


சரண்

 

 அவன் யார்? “”என்ன பேரோ தெரியலீங்க. சுருக்கமா அறம்னு எல்லாரும் சொல்றாங்க. வேலை, மேல்படிப்பு, ஆராய்ச்சின்னு வெளிநாட்ல தங்கிட்டு இப்ப திரும்பியிருக்கிறாராம். வயசு நாப்பத்தஞ்சு இருக்கலாம்…” பெரியநாயகிக்கு விவரம் தரத் தொடங்கினார் உத்ரா. “”பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் கூடுது. எல்லா விஷயமும் இவருக்குத் தண்ணிபட்ட பாடுன்னு பெருமையா பேசிக்கிறாங்க. தத்துவம், தன்னம்பிக்கை, சாஸ்திரம், விஞ்ஞானம் எதைப்பத்தியும் இவரைப்போல பேசமுடியாதுன்னு சொல்லிக்கிறாங்க” “”கேட்டிருப்பீங்களே…” அடிக்குரலுடன் பேசிய உதவியாளரைக் கவனித்தாள். “”ஆமாங்க. கூட்டத்தை வசப்படுத்திக் கட்டிப்போடற மாதிரி பேச்சில