கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்மையே போற்றுதும்…

 

  “”நில்லு…” மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின. பழைய துணியில் பொதிந்து கிடந்த குழந்தையை, இறுக அணைத்துக் கொண்டாள். “”காலங்காலமாய் கவுரவத்தோட வாழ்ந்துகிட்டிருக்கிற குடும்பம் இது; கண்டதும் உள்ள வர்றத நான் அனுமதிக்க முடியாது.” “”அம்மா…” மனோகரன் குரல் கம்மியது. “”என்னடா… இதுக்கு நீயும் உடந்தையா… என்ன பத்தி தெரிஞ்சும் இந்த முடிவெடுத்திருக்கேன்னா… அந்த தைரியத்தை கொடுத்தது இவளா?” ரஞ்சிதம் கண்களில் அனல் பறந்தது. “”அத்தை… நான் சொல்றத…”


கடவுள்

 

 திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது… “பெருமானே… எனக்கு காட்சி தந்த உங்கள் மாட்சியை என்னென்று சொல்வேன்…’ கண்களிலே மளமளவென்று ஆனந்த ஜலம். “போதும், போதும்… கண்களைக் துடைத்துக் கொள். என்னைப் பார்ப்பதற்காக கோடானு கோடி ஜனங்கள் வந்து, காத்துக் கொண்டிருக்க, நீ மட்டும் என்னை ஏன் காண வருவதில்லை; அதனால்தான் நானே… உன்னைக்…’ “பெருமானே… அப்படியெல்லாம்


கல்லும் புல்லும்!

 

 அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் நாராயணி. “”என்ன மாமி… பூசணிக்காய் சாம்பார், தக்காளி ரசம், கத்திரிக்காய் கறி செய்யட்டுமா?” என்று அங்கிருந்தபடியே கேட்டாள் நாராயணி. “”பண்ணுடியம்மா நாராயணி… நீ என்ன சமையல் செய்தாலும் எனக்கு பிடிக்கும். நீ ஒவ்வொண்ணையும் பார்த்து, பார்த்து ரொம்ப டேஸ்ட்டா பண்றே. ஒரு கையும், காலும் இழுத்துண்டு, படுத்த படுக்கையா இருக்கிற எனக்கு,


புதிதாய் பிறந்தநாள்!

 

 உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்… “”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட உன் மாமியார் வீட்டுக்குத் தானே போயிருக்கார். முன்னே, பின்னே தான் ஆகும். ஏன் இப்படி நிலை கொள்ளாம தவிக்கிறே?” “”போம்மா… உனக்கொண்ணும் தெரியாது. சாயந்திரம் கிளம்பினார்; நாலு மணி நேரமாச்சு. நான், உன் பேரனை விட்டு பிரிஞ்சதே இல்லைம்மா. இந்த வீட்டுக்கு தனியா வந்ததுலேருந்து, இதே வேலையாப் போச்சு. ஞாயித்துக்கிழமை ஆனா போதும், சனிக்கிழமை ராத்திரியில


அமைதியின் குரல்!

 

 இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி. சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு, உட்புறம் அழகான வடிவமைப்பில் சின்ன வகுப்பறைகள், ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் என, அத்தனை வசதிகளும் ஒருங்கே இடம் பெற்று, மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகிற அமைதியான சூழலோடு காணப்பட்டது. எல்லாரது குழந்தைகளுக்கும், தரமான கல்வி அளிக்க வேண்டும் எனும், உயரிய குறிக்கோளோடு உருவாக்கப்பட்ட அருமையான பள்ளிக்கூடம் அது. அலுவலர்களும், தொழிலாளர்களும் வசிக்கிற