கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

ஒண்ணுக்கு நாலு

 

 “”கோபால் சார்… கோபால் சார்…” என்று வாசலில் குரல் கேட்டது. குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின் செவிகளில், அவரை யாரோ வீட்டு வாசலில் நின்று கூப்பிடுவது கேட்டது. “”சரசு… வாசல்லே யாரோ என்னை கூப்பிடற சத்தம் கேட்கறது. பூஜை செஞ்சுண்டிருக்கேன். சித்த போயி யாருன்னு பாரு…” என்றார் கோபாலன். சமையலில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி சரசுவதி, அடுப்பை அணைத்துவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்து, கழுத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்து பார்த்தாள். ஏழெட்டு பேர்,


ஸாரே ஜஹான்ஸே அச்ஹா

 

 அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும் அவருடைய பேத்தி. மேடை ஏறினால், ஏவுகணையாக மாறி, எதிர்க்கட்சிகளை வசைப்பாடும் தமிழ்நேசன், வீட்டிற்கு வந்தால், பேத்தியின் மிரட்டல்களுக்கு பணிந்து போவார். அவரை குதிரையாக்கி, அவர் மேல் உட்கார்ந்து ஷாலினி சவாரி போவது, கண்கொள்ளாக் காட்சி. அன்றும் அப்படித் தான் நடந்தது. அதைப் பார்த்து குடும்பத்தினர் ரசித்தனர். “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா, இந்துஸ்தான் ஹமாரா…’ என்று, ஷாலினி


நியாயம்

 

 கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. பாவம் சந்தீப்… பத்து வயது சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான். இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி. “”இங்க பாரு சந்தீப்… உன்னோட நடவடிக்கை வரவர சரியில்லை. கொஞ்சமும் மனசில் பயமில்லை. கூட படிக்கிற பிள்ளைங்களோடு


மக்களின் தேசம்

 

 அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல… வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும் இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும். அதிலும், அந்த


மனசெல்லாம் மாயா!

 

 “”சாரிடீ… வசு… நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!” மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது… “மாயா… மாயாவா பேசினாள்… கண் தானம், ரத்ததானம், உடல் தானம்ன்னு கல்லூரியில் முழங்கிய மாயாவா… இப்படி பேசினாள்… ரத்தம் தர முடியாது… அதிலும் உயிர்த்தோழியின் கணவனுக்கு… தோழனுக்கு…’ “”மாயா… நீயா… இப்படி பேசுற?” வசுதாவின் முகத்தில், அதிர்ச்சி அப்பட்டமாக அப்பியிருந்தது… “”ஆமா… ஆமா… வேற விஷயம் இருந்தால் பேசு!” வசு உறுமினாள்… “”வேற விஷயம் பேசவா… என்னத்தை பேச…? ஷேவாக்குக்கும்,