கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

பூவும் நாரும்!

 

  “உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து, வந்திருப்பது யார் என்று பார்த்தார். நான்கு நாட்களுக்கு முன், அவர் மகள், அகிலாவை பெண் பார்த்து விட்டுச் சென்ற ராஜம் மாமி! அவசர அவசரமாக, பேப்பரை ட்ரேயின் மீது போட்டு எழுந்த கோபாலன், “”வாங்கம்மா… வாங்க… ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தா, நானே ஓடி வந்திருப்பேனே,” என்று அவரை வரவேற்று, வீட்டின் உள்பக்கம் திரும்பி,


சும்மா கிடப்பதே மேல்!

 

 தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர் சாக்கடைகள், குட்டை குட்டைகளாக தேங்கியிருந்தன. தேங்கியிருந்த கழிவுநீரில், பன்றிகள் குட்டிகளுடன் புரண்டு கொண்டிருந்தன. புரளும் சுகத்தில் அவை, “பர்க் பர்க்…’ என, குரல் எழுப்பின. மின் கம்பத்திலிருந்து, ஒற்றை பல்ப் கனக்ஷன், குடிசைக்குள் இழுக்கப்பட்டிருந்தது. பெயர்தான் ஒற்றை பல்ப் கனக்ஷன். ஆனால், மாதம், 500 யூனிட் மின்சாரம் அதன் வழி@ய திருடப்பட்டுக் கொண்டிருந்தது. குடிசையின் சமையலறை


மவுன மொழி!

 

 மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற ஆயாசம் எழும் வகையில், தனியான பங்களாக்களும், வீடுகளும் இடிபட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. அவைகளின் சுற்றுச் சுவர்கள் வரை, குடியிருப்புகளின் வராந்தா என்ற முகமோ, மூக்கோ நீள்கிறது. அடுத்து உள்ள குடியிருப்புகளை கை நீட்டினால் தொட்டுவிடும் தூரம். ஆனால், அங்கு வாழும் மனிதர்கள் தான், கதவுகளைச் சாத்திக் கொண்டு எட்ட இருக்கின்றனர். நான் புகுந்த வீடு


வீடு

 

 “”என்ன… கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க… உன் மனைவி நளினி வரல?” என்று, தம்பி வரதனை பார்த்து கேட்டார் ரகுபதி. வரதன் கொஞ்சம் தயங்கி, “”அவள் கிரஹப்பிர வேசத்துக்கே வருவாளான்னு சந்தேகமாக இருக்கு அண்ணா,” என்றார். “”ஏன்… ஏன்?” “”அவளுக்கு வீடு பிடிக்கல… நிறைய சொல்றாள்… எனக்கும் கொஞ்சம் அதிருப்திதான்.” “”புரியும்படியாதான் சொல்லேன்…” “”பில்டர் ஏமாத்திட்டாண்ணே… நம்ம வசதிக்கு கட்டச் சொன்னால், அவன் வசதிக்கு கட்டிக் கொடுத்துட்டான். அதனால, அவனோடு தகராறு வேற!”


துணை!

 

 அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…” மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள். “”சுமி… என்னம்மா இது, மனசை தேத்திக்கம்மா. சந்திரனின் காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா, உன் உடம்பு என்னத்துக்காகும். அண்ணன் தம்பி நாங்க மூணு பேரும், என்னைக்குமே உனக்கு துணையாயிருப்போம்.” சுமித்ராவின்