கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

பாசம்!

 

  அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள சீட்டில் போட்டு, அவர்களோடு முட்டி, மோதி, ஒரு வழியாக உள்ளே சென்று விட்டேன். பஸ், தன் பயணிகளை குலுக்கியவாறே, மெல்ல பஸ் நிலையத்தை விட்டு வெளியேறியது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே, என் சிந்தனை வலைக்குள் சென்றேன். “ஏண்டா மணி… காலேஜுக்குப் போய் ஒரு வருஷம் ஆகப் போகுது… இன்னும் மொபைல் போன்


தராதரம்!

 

 காலை நேரம் — ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான். “வத்சலாவின் பெரியப்பா போலிருக்கிறதே…’ என்று நினைத்தான். அடுத்த கணமே, “அவர் ஏன் இங்கெல்லாம் வரப் போகிறார்; அவரைப் போல தோற்றமளிக்கும் இவர் யாரோ…’ என எண்ணினான். ஆனால், வந்தது அவர்தான். பரபரப்படைந்தான்… “”வத்சலா!” என்று குரல் கொடுத்தான். “”என்னங்க…” “”யார் வர்றாங்கன்னு பாரு!” எட்டிப் பார்த்தாள். அதற்குள் மாணிக்கம் வீட்டை நெருங்கி விட்டார். அவர் மிகவும் சங்கோஜத்துடன் வந்திருந்தார்.


காணி நிலம்

 

 “”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார். “”அப்புறம்… சொல்லுடா லஷ்மணா… உன்னோட கேஷியர் வேலை எப்படி போகுது?” “”அடப்போடா நீ வேற… காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் திரும்பத் திரும்ப பணத்தை எண்ணி, எண்ணி ஒரே போர்… வெறுப்பா இருக்குடா… ” சலித்துக் கொண்டார் லஷ்மணன். “”பணி ஓய்வுக்கு அப்புறம் வீட்டிலேயே சும்மா இருக்க போரடிக்குதுன்னு நீ தானடா ஜவுளிக்கடையில் போய் வேலைக்குச் சேர்ந்தே?”


கைம்மாறு

 

 வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள். “”வசு…” அம்மாவின் குரலில் பதட்டமும், அவசரமும் தெரிந்தது. “”வசு… வீட்டுக்குக் கிளம்பிட்டியா? நேராக, கங்கா நர்சிங் ஹோமுக்கு வந்துடு… அத்தையை அங்கே சேர்த்திருக்காளாம்…” வசந்தாவுக்கு, “திக்’ என்றது. வசந்தாவுக்கு முக்கிய உறவே, அத்தையும், அவளுடைய குடும்பமும் தான்… “”என்னாச்சு?” “”கொஞ்சம் படபடப்பாகவே அத்திம்பேர் பேசினார். ராத்திரி முழுக்க அத்தைக்கு நெஞ்சு வலியாம். ஜெலூசில், பெருங்காயம் என்று கைவைத்யம் பார்த்திருக்கா… விடிகாலை 5 மணிக்கு


ஐடியா அய்யாச்சாமியின் ஆபரேசன் வீடியோ!

 

 “”என்னண்ணே… உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?” என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி. “”கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச் சொவரு, தடுப்புச் சொவரு எல்லாம் தான் பொரளுது. “லம்ப்ப்பா’ துட்டடிக்க, “ஆபரேசன் வீடியோ’ன்னு ஒரு சூப்பர் ஐடியா புடிச்சிருக்கேம்லா? அ… பம்பம் பஜக் ஜம்…” கண் சிமிட்டினார் அய்யாசாமி. “ஐடியா’ என்றதும், உஷாரானான் அப்புராஜ். “”ஒர்க் அவுட் ஆயிடுமாண்ணே?” அவன் கேட்க, அவருக்கு கோபம், “ஜிவுக்!’ “”ஆக்கங்கெட்ட கூவ… ஆரம்பிக்கும் போதே கட்டய போடுதியேல…” எரிச்சலானார்.