கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

குரு-சிஷ்யன்!

 

  கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை முடிக்கும் போது… சிவசு வாத்தியார் இன்றைக்கும் அன்று போலவே இருக்கிறார். “”நீ… நீங்க… தண்டபாணி தானே!” “”ஆமாம் சார்… நீங்க சிவசு சார் தானே… நான் அப்பயே நினைச்சேன். ஆனா, சட்டுன்னு கேட்கறதுக்கு எப்படியோ இருந்தது.” சிவசு சார், எதிர் வரிசையில் இருந்து எழுந்து வந்து, தண்டபாணிக்கு அருகிலிருந்த நபரை கொஞ்சம் நகரச் சொல்லிவிட்டு,


திணையும் பனையும்!

 

 ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார். மணிகண்டன் இன்னும் கை கழுவ எழுந்து கொள்ளவில்லை. அவன் தட்டில் இன்னும் பாதி இட்லி இருந்தது. ஆனால், மாதவன் சாப்பிட்டு, கையும் கழுவி வந்து உட்கார்ந்திருந்தார். இந்த முறையாவது, அவர் பில்லுக்கு பணம் கொடுப்பாரா என்று பார்த்தான் மணிகண்டன். மனிதர் பில் தொகையைப் பார்த்து வியந்தார். “”தலா ரெண்டு இட்லி, ஒரு காபி சாப்பிட்டதுக்கு எழுபது


நிராசை!

 

 கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில். அவனருகில் பூக்கூடை, பழக்கூடைகளுடன் ஏறிய பெரியவர்கள் இருவர், தங்கள் காலடியில் அதை பத்திரப்படுத்தி அமர்ந்து கொண்டனர். பஸ் கிளம்பியது கூட தெரியாமல் கண்களை மூடினான். மனதில் அப்பா, அம்மாவை பார்க்கப் போகிறோம் என்ற நினைவு குறுகுறுப்புடன் ஓடியது. பதினைந்து வருட இடைவெளியில், தன்னை அவர்களால் அடையாளம் காண முடியுமா? “அப்பா… எங்கேப்பா போற… நானும் வர்றேன்…’


வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!

 

 திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று அழைத்திருந்தான். இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, “தர்மம் வெல்லும்’ என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர். அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, “நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார். “தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்…’ என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர். கடைசியாக சகாதேவனிடம்


பழைய மாலை!

 

 “”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சரித்திரம்! மனித வாழ்க்கையின் சாட்சி அது. நாம் இன்று இருக்கிற தேசம் எப்படி உண்டானது, யார் யாரெல்லாம் இதை கட்டியமைத்தனர். இந்த அரசியல் அமைப்பு எப்படி ஸ்திரப்பட்டது என்பதையெல்லாம் விளக்குகிற காலக் கண்ணாடி, சரித்திரப் பாடம்தான். நான் இந்த சப்ஜெக்ட்டை விரும்பி எடுத்துத்தான் படித்தேன். நீங்களும் உண்மையான ஆர்வத்துடன் படிக்க வேண்டும்