கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

அழைப்பு

 

 அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. “இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு எந்த நிமிஷமும் வரலாம்னு தோணுது. அதனாலே நீ மேற் கொண்டு நடக்க வேண்டியதற்கு எப்பவும் தயாரா இருக்கிறது தான் உசிதம்” என்று சொல்லி டாக்டர் சிவசாமி கைவிரித்து விட்டார். அப்பாவுக்கு இப்படியா ? மனதால் நினைத்துப் பார்க்கக்கூட அவனுக்கு கஷ்டமாயிருந்தது. அப்பா ஒரு ஆசாரசீலர். திருமணமான சில வருஷங்களிலேயே மனைவியை இழந்தவர். ஆன்மீகத்திலும், பக்திமார்க்கத்திலும் முழு ஈடுபாடு கொண்டவர்.


ஊமையொருபாகன்

 

 ஊரில் பாதிப்பேர் சுப்ரமணி. அப்ப மீதிப்பேர்? அவர்கள் வேற்று¡ரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும். ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல சிறு குன்று. அறுவடைநெல் குவிச்சாப்போல. அதன் உசரத்தில் கோவில். அதைப்பாக்க கொள்ளை ஜனம். வந்துசேரும் ஜனங்களிலும் பாதிப்பேர் சுப்ரமணி. அடிவாரத்தில் நாவிதர்கள் – சுப்ரமணிகள் – கத்தி விரித்துக் காத்திருப்பார்கள். சிறு பிள்ளைகள் தென்னைமட்டையை நார் உரிச்சாப்போல… முடியுடன் உட்கார்ந்து மொட்டையாய் எழும். எதிரே ஊரணி. குளித்து மண்டைக்கு சந்தனாலங்காரம். புதுத்துணி உடுத்தி, பிற்பாடு பார்த்துச்


மீண்டும் ஒரு மாலைப் பொழுது

 

 சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும் கைதட்டச் சொல்லி பயிற்றுவிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டாக்டர் வேதசகாயம் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டது மாதிரியே இல்லை. போர்னோ படங்கள் நிறைந்த புத்தகத்தைக் கையில் வைத்து ஒவ்வொரு கோணமாக திருப்பத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். (“கொன்னுட்டான் போ”) திடீரெனச் சிரித்துக்கொண்டார். “இந்தப் புத்தகத்தையே எத்தனைத் தடவை பார்ப்பீங்க?” “நீ வேணும்னா புதுசா ஒன்னு வாங்கிக்கொடு. வேண்டாம்னா சொல்றேன்?” முகத்தைக்கூடப் பார்க்காமல்


பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

 

 பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும் நல்ல ஆரோக்கியம் . உழைத்து உழைத்து உரமேறிய தேகம். “ஹா.. இந்தப் பீடி இல்லாடா மனுஷன் செத்துப் போவான். இந்தவயசுலயும் வகுரு என்ன பசி பசிக்கி? சோறாக்க எப்படியும் இன்னும் அரை மணியாகும். அப்புறம் டிராக்டர் ஓட்டப் போயிருக்கற மகன் வரணும். சாப்பிட ஒரு மணியாயிரும். அது வர இந்தப் பீடி தான்” என்று யோசித்துக்


காய சண்டிகை

 

 அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது , இடுப்பு எது மார்பு எது என்றே இனம் பிரித்துச் சொல்ல முடியாத ஒரு பெண்ணை மார்கழிப் பனியில் பார்த்தால் என்ன ? இல்லை சித்திரை கடுங்கோடையில் பார்த்தால் தான் என்ன? ஆனால் இந்த கவித்துவமான எண்ணமெல்லாம் அவளை எங்கள் ஊருக்கு வரவழைத்த இயற்கை அல்லது கடவுளுக்குத் தெரிந்திருக்க வில்லை.அவளுக்கு வயது முப்பத்தைந்தும் சொல்லலாம் , ஐம்பத்தைந்தும்