கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த நாள் ஞாபகம்

 

  “”அப்பா… உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,” என்று கேட்டான் என் மகன். பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான், “”ஞாபகமில்லாம என்ன… நல்லாருக்கு. அப்போ ரெண்டு கிருஷ்ணமூர்த்தி படிச்சாங்க. நீ யாரை சொல்ற?” “”என்.கிருஷ்ண மூர்த்திப்பா… திருக்கொட்டாரம்.” “”ஓ… அவனா… நல்லா ஞாபகமிருக்கே. சிவப்பா, ஒல்லியா, நெடு நெடுன்னு இருப்பான்.” “”ஆமாம்… இப்போ பெரிய ஆளா இருக்காராம்!” “”பெரிய ஆள்னா…” “”பெரிய பணக்காரராம்… கோடீஸ்வரராம். சென்னையிலேயே, விரல் விட்டு எண்ணக்கூடிய


ஈரம்

 

 “டேய் கபாலி… உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா… இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன். உனக்கு நன்றியே இல்லையேடா… தோ… கொசுறு துட்டு அம்பது ரூவா, அத கடனா கேட்டா அழுவுறே… தூ.” கபாலியை தண்டிக்கும்படி, கடவுளிடம் மாரி, “ரெக்கமண்ட்’ செய்து கொண்டிருக்க, அதை பற்றி துளிகூட கவலைப் படாத கபாலி, காஜா பீடியை, லயிப்பாய் புகைத்துக் கொண்டிருந்தான். அலட்சியமாய் பீடியை புகைத்தபடியிருந்த கபாலியின் பனியனை பற்றி இழுத்தான் மாரி. முன்னமே


ஓடிச்செல்லும் நதிகள்!

 

 “”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று, தியாகு புன்னகையுடன் கவனித்தான். ஆனால், அலைபேசி <உடனே அழைத்தது. லேப்-டாப்பிலிருந்து தலையைத் தூக்கி மொபைலை பார்த்தான். சிவராமனின் எண் அது, அவன் கம்பெனியின் சூப்பர்வைசர். “”யெஸ் சிவராமன்… சொல்லுங்க…” என்றான். “”குட்மார்னிங் சார்… அது வந்து…” என்று இழுத்தார். குரல் தயக்கமும், குழப்பமும் சேர்ந்து தடுமாறியது. “”என்ன சொல்லுங்க…” “”ராத்திரி சரியா தூக்கம் இல்ல சார்…


வெளிப் பூச்சிக்கள்!

 

 காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில் அமர்ந்தபடி, கோவில் கோபுரம் தெரிகிறதா என்று, அவர் மனைவி வைதேகி பார்த்துக் கொண்டே வந்தார். மருமகள் பாமா, மூன்று வயதுப் பேரனை அணைத்துக் கொண்டு, அடக்கமாக அமர்ந்து கொண்டிருந்தாள். ஆட்டோ முக்கி, முணகி அந்தச் சிறுகுன்றில், ஒருவழியாக ஏறி நின்றது. உச்சியில் இருந்த கோவில் அருகில் செல்ல முடியாதபடி, ஏகப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊர் ஓரத்தில் இருந்த


காதலை வென்ற காதல்!

 

 நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக இருப்பவள். ஐந்தரை அடியில், ஐம்பது கிலோ எடையில், கோதுமை நிறத்தில், எப்போது பார்த்தாலும், அப்போது செய்த முந்திரி கேக் போல் இருப்பவள். ஆங்கிலமும், தமிழும் அளவாக கலந்து பேசி, யாரையும் தன்பால் இழுப்பவள். படிக்கும் காலம் தொட்டே, ஆண்கள் சட்டென்று வீழ்ந்தாலும், தன் நிதானம், ப்ளஸ் அன்பான கண்டிப்பால், எவரையும் நெருங்க விடாமல் ஜாக்கிரதையாக இருப்பவள். ஆனால்,