கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

பரிசும் தரிசும்!

 

  வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம் கொடுத்து, வாழையடி வாழையாக பல்கிப் பெருகி நிற்கும் வாழைப் பரம்பரை. தன் இலை, கனி, காய், பூ, நார், மடல் என்று, சகலத்தையும் வினியோகித்து, நேயத்திற்கும், காருண்யத்திற்கும், சிறந்த சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கும் வாழைகள். தனபால்! மகனை நினைத்ததும் நெஞ்சம் இளகியது. எப்படிக் கிடந்த நிலம் இது… வெறும் தரிசு. அதிலும் கள்ளியும்,


கனவு

 

 “”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும் அளித்தது. இந்த பரிசு ஏன், எதற்காக எனக்கு கொடுத்தனர் தெரியுமா… இருபத்தோராம் நூற்றாண்டின், மிகச் சிறந்த இளைஞனாக, சர்வதேச அளவில் நடந்த ஆய்வில், நான் தேர்வானதால் தரப்பட்டது… “”எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. ஆனால், அந்தக் தொகை, எனக்கே மூச்சடைக்க வைத்தது. அவ்வளவு பெரிய தொகை, எங்கே என் குணத்தை மாற்றிவிடுமோ என்று எனக்கு ஒரு


சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

 

 “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,” என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம். “”என்னடி பேசுற… அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?” “”நாம ஏங்க தெருவுக்கு போறோம்… நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்… நாயா பேயா


நிஜங்களும் நிழல்களும்!

 

 அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள், “டிவி’ தொடரில். ராஜேஸ்வரி இந்தத் தொடரைத் தொடர்ந்து பார்ப்பவள் அல்ல. இருந்தாலும், அவ்வப்போது பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில், கதையின் போக்கு அவளுக்கு பிடிபடாமல் இல்லை. தவிர இந்த, “மெகா தொடர்’களில் கதை, “மினி’யாகத் தானே இருக்கிறது. ராஜிக்கு இதுபோன்ற பெண்களின் கண்ணீர்தான் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. அவள் வாழ்க்கையில் இந்தப் பெண்ணை விட, அதிகமான


புதிதாக ஒருவன்!

 

 விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து விட்டால் போதும். முழுதாக இரண்டு நாட்கள் விடுமுறை. யப்பா, எவ்வளவு செய்யலாம் இந்த இரண்டு நாட்களில்? முதலில், இப்படி காலை ஆறரை மணிக்கு எழுந்திருக்க வேண்டாம். அவசரக் குளியல் இல்லை. அப்பாவுக்கு பயந்து, இட்லிகளை விழுங்க வேண்டியதில்லை. கல்லூரி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற அந்த கட்டடங்களையும், மைதானத்தையும், வகுப்பறைகளையும் நினைத்தாலே,