கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

கிராமம்

 

 சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும் தான் தனிமையில் இருப்பதை பெரிதுபடுத்தாமல், உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை நினைத்தும் கவலைப்படும் அம்மா, எப்போது பிள்ளைகள் போனில் பேசினாலும் அவர்கள் கவலைப்படக் கூடாதென்பதற்காக சந்தோசமாகத்தான் பேசுவாள். அந்தப் பகுதியில் யாருக்கு என்ன குறை நேர்ந்தாலும் தான் முன்னின்று தீர்த்துவைத்து நல்லது செய்யும் ஒரு உன்னதமான நல்ல


தொலைந்தவர்கள்

 

 9.30 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும். அப்பொது தான் அவன் காலையில் சென்னையில் இருக்க முடியும். செந்தில் பெங்களூரில் உள்ள சாஃட்டுவேர் நிறுவணத்தில் வேலையில் செய்கிறான். சனி, ஞாயிறு வந்ததும் சென்னைக்கு வந்து விடுவான். 9.25க்கு ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக ஏறும் போது ஒரு உருவம் மீது இடித்துவிடுகிறான். “சாரி சார் !” “ஹாய் செந்தில் .. உன்ன பார்ப்பேன் நினைக்கல ” செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான். “என்ன தெரியுல” செந்தில் சற்று யோசித்து..” ஏய்


செல்வம்

 

 ‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. ‘மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா’ யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது. விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே காணாமல் கரைந்து போய்விடலாம் எனும் நம்பிக்கை வந்தது. ‘நீ எனக்குப் பொறந்தவன்னா இப்டி


மூத்திரக் குழி

 

 மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல நாங் கேட்டது. வெத்தில போட்ட எச்சி தெறிக்க பாம்படக் கெழவி சொல்வா பாருங்க கத… சாய்ங்காலம் ஆத்தா தேடி வார வரைக்கும் அங்கனையே கெடப்போம். “அப்ப, கட்டபொம்மனுக்கு சமுத்திரம்னு ஒரு எதிரி இருந்தாம்.” கெழவி சொல்லும். “சமுத்ரம் ஒரு கள்ளன். ராவெல்லாம் போய் களவாண்டுட்டு காலையில காணாமப் போவாங். கட்டபொம்மனுக்கு சேதி போச்சு. சமுத்திரத்த புடிக்க


வேட்டை

 

 தன் முன் கைகளை இறுக்கமாக கட்டியபடி பவ்யமாக நின்ற மக்கள் நல அமைச்சர் பெரியமுத்துவை பார்த்து, “யோவ்! பெரியமுத்து, உன் தொகுதிதான் ரொம்ப மோசமா, வீக்கா இருக்குன்னு… நாம அனுபிச்ச, தனியார் சர்வேயில தெரிய வருது …” என்று ஒரு ரிப்போட்டை மேசையின் மீது தூக்கிப் போட்டு, கோபமாக சொன்னார் கட்சித்தலைவர். “தெரியுதுங்க தலைவா… அதான்… ஏதாவது பண்ணலாம்னு …” மெதுவாக தலையை சொரிந்தபடி இழுத்தார் அமைச்சர் பெரியமுத்து. “இப்படியே தலைய சொரிஞ்சின்னா, எலக்சனுக்கு அப்புறம் கம்பிக்கு