கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கம்ப்யூட்டரின் கதை

 

  ( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின் புலம்பலே இந்த கதை.) ” நம்மல இப்படி அஸ்ஸம்பில் பண்ணுறத பார்த்தா… யாரோ புது டெவலபர் வாறான் போலிருக்கு….. இவனாவது நல்ல கோடிங் அடிக்கிறானா பார்ப்போம்….” அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த டெவலபரை அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிமுகங்கள் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் முன் அமர்கிறான். “வந்துடாய்யா…. வந்துடான்…


எரிமலை வாசல் பூ

 

 உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?’ என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. ‘ஸ்பீக்கிங்’ என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, ‘வணக்கம் சார், என்னை உங்களுக்கு


வலி

 

 வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே.. சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிக் கொண்டது அண்ணா சாலை. ஒவ்வொரு சிக்னலை தாண்டி செல்வதற்கு பலரும் பெரும் படாக இருக்கும். அண்ணா மேம்பாலாத்ததை நெருங்கிக் கொண்டு ஒரு பேரூந்து சென்றுக் கொண்டு இருந்தது. தமிழரசன் அவன் பெயருக்கு எற்றார் போல் அந்த பேரூந்துக்கு அவன் தான் அரசன். அந்த பேரூந்தில் வரும் எல்லோர் உயிரும் அவனை நம்பி தான் இருந்தது. இவன் கவனம் சிதராமல் வண்டி


நம்பிக்கை

 

 சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும். இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.


இலைகள்

 

 பச்சைப்பசேலென்று செழித்துவளர்ந்த கொடிகளுக்குள் மறைந்துவிட்ட கணவனைப் பெரும் பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதே அவன் உடலில் அங்குமிங்கும் சிறிய பச்சை இலைகள் தென்பட்டன, நாள்முழுக்க உடலைச்சுற்றி வளர்ந்த கொடிகளின் மிச்சங்களா அவை, அல்லது புதிய கொடியொன்று வளர்வதற்கான அடையாளமா என்று அவள் வழக்கம்போல் குழம்பிக்கொண்டிருக்கும்போது அவன் அவள் தந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனது வாசிக்கும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான், அன்றைய செய்தித்தாளை முதல் பக்கத்திலிருந்து விரிவான அலசல் செய்தபோதும்கூட அவன் சாதாரணமாகவே இருந்தான், அங்கங்கே