கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா

 

  கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின் இயல்பு… அப்படித்தான் செய்வர் என, சுபாஷினி புரிந்து வைத்திருந்தாள். ஆனால், “”அம்மா… எவ்வளவு நேரமாச்சு… சீக்கிரம் டிபன் வைக்க மாட்டியா… நான் காலேஜ் கிளம்ப வேண்டாமா?” என்று வெறுப்புடன் மகன் கத்துவது, அவளுக்கு புதுசு. கொஞ்ச நாளாத் தான் இப்படி… “”ரெடியாயிடுச்சு… வா சாப்பிட…” “”என்ன இது… இன்னிக்கும் உப்புமாதானா?” “”சித்தார்த்… பத்து நாளைக்கப்புறம்


மரம் வேண்டுமே மரம்!

 

 ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் பட்டாளம். “”இதுக்குத்தான் இந்த வேப்ப மரத்துக்குக் கீழே படிக்க வர மாட்டேன்னு சொன்னேன். மணிய பாரு, ஒன்பது தான் ஆச்சு. தூக்கம் கண்ணை சொருகுது,” என்று புலம்பினான் முனி; முழு பெயர் பாணா முனி. “”காத்தாலேயே வயிறு முட்ட தின்னா, தூக்கம் வராம என்ன பண்ணும்? நம்ம நாலு பேர்தான் இருக்கோம். மாரிய காணோமே,” என்றாள்


கிராமத்து வா(நே)சம்!

 

 “”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா. “”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு வச்சிருக்கியா? எந்த காரணமா இருந்தாலும் சரி… நாம எல்லாரும், நாளைக்கு காலைல பாட்டி ஊருக்கு கிளம்புறோம்,” விவாதத்தை தொடராமல், முற்றுப்புள்ளி வைத்தாள், சங்கீதாவின் தாய் சிவகாமி. சங்கீதாவின் பாட்டி, விழுப்புரம் அருகிலுள்ள கீரமனூரில் வசிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், மாரியம்மன் திருவிழாவிற்கு செல்வதை, திருமணமான, 20 வருடங்களாக வழக்கமாக கொண்டிருந்தாள் சிவகாமி. இப்பயணம், தன் உறவினர்களை சந்திப்பதற்கான


மனிதர்கள்

 

 மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய். “அது சுப்ரமணியம் சார் தானா…’ என்று, காதர்பாய் தீர்மானிப்பதற்குள், அவர், டூ வீலரில், இவரை தாண்டிப் போக, காதர்பாய் அவசரமாய் தன் சைக்கிளை எடுத்து, பின் தொடர்ந்தார்; ஆனால், துரத்திப் பிடிக்க முடியவில்லை. சைக்கிளின் வேகத்தைக் குறைத்துக் கொண்ட காதர்பாய், “சரி… ரோட்டில் கேட்பதை விட, வீட்டிற்குப் போய் கேட்பது தான் நல்லது…’ என்று முடிவு செய்து,


கல்வியைத் தாண்டியும்!

 

 அதிகாலை 3.00 மணி. ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால், ராகவன் மட்டும் எழுந்து விட்டான். கடிகாரம், மணி 3.00 என காட்டியது. அவசர அவசரமாய் கண்ணை துடைத்துக் கொண்டு, தன் மகனை எழுப்பினான். “”டேய்… ஸ்ரீதர் எழுந்திருடா. மணி மூணாகுது.” “”இருங்கப்பா… இன்னும் கொஞ்ச நேரம். மூணு தானே ஆகுது,” திரும்பிப் படுத்தான். அவ்வளவுதான். “பளார்’ என அவன் முதுகில் இடியாய் வந்து, அவன் கை விழுந்தது.