கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

செவத்திமீன்

 

 செவத்தி… யார் இவள்? தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில் உயிரை ஏந்திக்கொண்டும், பசியால் அழும் கைக்குழந்தையின் வாயினை தங்கள் பசையற்ற மார்பகங்களில் திணித்துக் கொண்டும் காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களில் இவளும் ஒருத்தி. கடலுக்குச் சென்றவர்கள் கொண்டு வரும் மீன்களை விற்றால்தான் அடுத்த நாள் இவர்களின் வீடுகளில் அரிசி உலையிலிடப்படும். செவத்தியின் வீடு ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. மீன் கிடைக்காமல் வீடு திரும்பும் பட்சத்தில்,


சாமாலியின் திண்னை

 

 விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும். ”உன் மனசு யாருக்காவது வருமாடா? என்ன பகவான் ஒரு காலை நொண்டியா படைச்சுட்டான்! போடா கண்ணா மாட்டுக்கு கொஞ்சம் வைக்கோல் பிடுங்கி போடேன்” குழைவாள் விசாலம். ”நன்னா தேனொழுக பேசு…ஒரு நாளைக்காவது சூடா சாப்பாடு போட்டிருக்கியா? பழைய சாதம்தான்”. ”நம்ம ராமூர்த்தி அய்யராத்துல அவர் பேரனுக்கு நிச்சயதார்த்தம் வருது…நம்ம குருதான் சமையல்., அவன்கிட்ட சொல்லி வைக்கறேண்டா”. ”வாய்தான் இருக்கு”,


செல்வி

 

 இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட். துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும். பனி கொட்டிக்கொண்டு இருந்தாலும் செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசியாக பெரிய சைஸ் போர்வையை


ஊர்

 

 நான் இமைகளைப் பிரித்தபோது சுவர்க்கடிகாரம் காலை மணி 9:40ஐ என் விழித்திரையில் பதித்தது. பக்கத்தில் பார்த்தேன். அனுக்குட்டி ஒரு காலை என்மேல் போட்டுக்கொண்டு ஒய்யாரமாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். ரேவதி படுக்கையிலிருந்து எழுந்து போயிருந்தாள். அவள் போத்தியிருந்த போர்வை மடித்துக்கிடந்தது. முந்தையநாள் இரவு ஏர்ப்போர்ட்டிலிருந்து வீடு வந்துசேர பின்னிரவு 1.30 மணியாகி விட்டது. நாளையும் ஓய்வெடுத்துக்கொண்டு திங்களன்று வேலைக்குச் சேர்ந்தால் போதும் என நினைத்த போது ஆறுதலாக இருந்தது. அனுக்குட்டி எழுந்து விடப்போகிறாளே என்ற நினைப்பால் அசங்காமல் படுத்தே கிடந்தேன்.


அப்பாவும், நடேசனும்

 

 ‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே வந்து தங்கியிருந்துட்டு போன புதனுக்குதான் கிளம்பினாங்க, அவங்களும் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க, உன் சிநேகிதப்பய பரமசிவனுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம், அவங்க அப்பாவும், அம்மாவும் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டுப் போயிருக்காங்க, அவனும் நேத்தி சாயங்காலம் நேர்லவந்து உன்னை அவசியம் வரச்சொல்லி கடிதாசி எழுதணும்ன்னு என்னைக் கேட்டுகிட்டுப் போனான், அதனால நீ எவ்ளோ சீக்கிரம்