கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

வெற்றியும் தோல்வியும்

 

 யார் ‘கண்’ பட்டதோ தெரியவில்லை. என்னுடைய ‘கண்கள்’ இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தேன். அடிக்கடி விட்டத்தையே வெறித்துப் பார்த்தேன். மனசெல்லாம் நாளை நடக்க இருக்கும் கவிதைப் போட்டியைப் பற்றிய எண்ணமே இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். மிக அமைதியாகக் கவலையின்றித் தூங்கிக் கொண்டிருந்தாள். வெற்றி-தோல்வியைப் பற்றி இரண்டு கவிதைகள் சொல்லவேண்டும் என்பதே போட்டி. நானும் பேராசியர் ரவிச்சந்திரனும் மட்டுமே போட்டியில் பங்கேற்கிறோம். போட்டியில் என்ன சொல்வதென்று இதுவரை விளங்கவில்லை. யோசித்து


காதலென்பது காவியமானல்

 

 கழுத்தில் சுற்றியிருந்த மப்ளர் கொஞ்சம் இறுக்கவே அதைத் தளைர்த்தியவாறு நடந்து கொண்டிருந்தான் சங்கர். உடலைச் சுற்றி இறுகிப் பின்னியிருந்த கோர்ட், தலையை நெற்றிவரை மறைத்துக் கொண்டிருந்த குளிர்த் தொப்பி, கைவிரல்களை காப்பாற்றிக் கொண்டிருந்த கையுறை, காலிலிருந்த பூட்ஸ் என்று குளிரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவன் அணிந்திருந்த கவசங்கள் பல. இத்தனை கவசங்களுக்கிடையிலும் கொஞ்சமாய் வெளியே தெரிந்த மூக்கின் நுனி, காதின் ஓரங்கள் இன்னும் இருக்கின்றனவா? இல்லையா? என்று உறுதி செய்வது போல தொட்டுப் பார்த்துக் கொண்டான்.


போதிமரம்

 

 வீட்டுக்குள்ள நுழைஞ்ச முத்துக்கருப்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஆத்திரதுக்குக் காரணம், தொலைபேசி அலறிக்கொண்டிருந்ததும் அது எங்க இருக்குங்குறது தெரியாததும் தான். ஏண்டா இந்தக் கார்ட்லெஸ் போன் வாங்கினோம்னு அலுத்துக்கிட்டான். எதுவுமே இருந்த இடத்தில இருக்குறதே இல்ல. எத்தன தடவ சொல்லியாச்சு. தொலைபேசிக்கு மேல அலறிக்கொண்டே அங்கயும் இங்கயுமாத் தொலைபேசியின் கையில் வைத்துக்கொள்ளும் பகுதியைத் தேட ஆரம்பித்தான். மனைவி இளவரசியோ அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே அவளது வாடிக்கை இது தான். ஒரு வழியாக் கண்டுபுடிச்சுப் பேசி


எழுத்தாளன் மனைவி

 

 காலையில் ஆ·பீசுக்கு வந்து உட்கார்ந்து தினமணியைப் பிரிப்பதற்குள் அதற்காகவே காத்திருந்ததுபோல் ·போன் வந்தது. எதிர்முனையில் உச்ச சத்தத்தில் ‘ஹலாவ்’ என்கிற குரலைக் கேட்டதும் தெரிந்துவிட்டது. சங்கரலிங்கம். ‘சொல்லுங்க சார், நான் விஜயன்தான் பேசறேன்’ ‘விஜயன் சார், விஜயன் சார்’, ஆக்ஸிஜனுக்குத் திணறுகிறவர்போல் எதிர்முனையில் சங்கரலிங்கம் திக்குமுக்காடினார், ‘என்னாச்சு சார், ஏன் ஒரு மாதிரி பேசறீங்க ?’ பேப்பரை மேஜைமேல் போட்டுவிட்டு ரிசீவரை சரியாய்ப் பிடித்துக்கொண்டேன். ‘சந்தோஷம் சார், சந்தோஷம், ஆனந்தக் கண்நீர்’ என்றார் சங்கரலிங்கம். அந்தக் காலத்தில்


சத்தியவாக்கு

 

 அவள் வரவை எதிர்ப்பார்த்து ஆத்திரத்துடன் காத்திருந்தான் அருண். ‘ஜாலக்காரி என்னாமாய் அப்பாவி வேடம் போடுகிறாள். வரட்டும் ஒரு கைப்பார்கிறேன்.’ என்று கல்யாணமாகி ஒரு வாரமேயான புத்தம் புது மனைவி திவ்யாவை எண்ணி மருகினான். கோயிலில் இருந்து திரும்பியவள் நேராக அவனிடம் வந்தாள். “அலுவலகத்தில் இன்று முக்கியமான ப்ராஜக்ட் தொடங்கப் போவதாக சொன்னீர்கள் அல்லவா. அதை நல்லபடியாக தொடங்கி நடத்த வேண்டிக்கொண்டேன்.” என்று கூறி விபூதி வைத்துவிட்டாள் திவ்யா கணவனின் மனநிலை அறியாமல். ‘ஆஹா, இவளல்லவா காதல் மனைவி!