கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

நிம்மதியைத்தேடி

 

 காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது. கையில் அக்பர் காலத்துப் பெட்டி ஒன்றுடன் ரயிலில் இருந்து இறங்கி , ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்திறங்கும்போது , ” சார் ஆட்டோ ”


சோகம் தரும் படிப்பு

 

 “பெரிசா உடம்புக்கு ஒன்னும் இல்ல… நான் கொடுக்குற மாத்திரைய நல்லா சாப்பிடுங்க… சீக்கிரம் குணமாகும்.” அதிகாலை 5.30 மணியிருக்கும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். காலையில் என்ன நடக்குமோ என்ற பதட்டம். என்ன முடிவு வருமோ என்ற அச்சம். “சாந்தி எழுந்திரு…. +2 ரிஸல்ட் இன்னைக்கு வருது… நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க…” என்றான் சரவணன். டாக்டாராகி விட்ட கனவில் இருந்த சாந்தி, தன் கனவைக் கலைத்து நிகழ்காலத்தற்கு வந்தாள். “என்ன


காமக் கடும்புனல்

 

 ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ’விலாவது வீட்டுக்கு போலாமின்னு பேஸ்மண்ட்லிருந்து வெளியே வந்தான் முருகேஷன். பெங்களூரூ வாழ் IT கூலிகளுக்கு இருக்கும் அதே அழகு களையான முகத்தை வைத்து கொண்டு MG ரோட்டிலில் நின்று கோரமங்களா பர்த்தீரா’ன்னு கெஞ்சி கொண்டிருந்தான். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணி வரையும் இந்த ஆட்டோகாரர்கள் செய்யும் அலும்பை நினைத்து கொண்டு ஒவ்வொருத்தராய் கேட்டும்,


என் இனிய உலகம்

 

 கதை கருவாக்கம் : சிறில் அலெக்ஸ் கண் திறந்து பார்க்கையில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது எழுத்தாளருக்கு. கடந்த சில நாட்களாக பழக்கப்பட்டிருந்த அசெப்டிக் மருத்துவமனை வாடை சுத்தமாக விலகிவிட்டிருந்தது. சுலபமாக மூச்சுவிடமுடிந்தது. எல்லாம் சரியாகிவிட்டதா என்ன? நீல ஆடை மலையாள சேச்சிகளைக் காணோம். கையில் குத்தியிருந்த ஊசிமுனைகளைக் காணோம்.. எங்கே வந்திருக்கிறோம்? ஆனால் பார்த்த இடங்களாகத் தான் தோற்றமளித்தன எல்லாம். நாடக செட்டைப் போல கலந்து கட்டியான இடம். கொஞ்சம் பம்பாய் வீதிகள், கரோல்பாக் மூலை, பூசாரோட்,


ஐந்தும், ஆறும்

 

 “சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா? நைட்க்கு மாவு இருக்கு. இட்லியோ தோசையோ செஞ்சிக்கலாம்” அருண் சொன்னதற்க்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு கதவைச் சாத்திட்டு, திரும்புபோது, எதிரில்