கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

504 கதைகள் கிடைத்துள்ளன.

சதுரங்கம்

 

 ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில் வாங்கிடுவான். டூ தௌஸண்ட்க்கு மேல ரேட்டிங் வைச்சிருக்கிற உங்க வயசுள்ள ஒரு பிளேயர்தான் அவனுக்கு ஆப்போனண்டாம். குழந்தை கொஞ்சம் பதட்டமா இருக்கான். நீங்க வந்தீங்கன்னா நல்லா இருக்கும்”. செல்பேசியில் என் மனைவி சின்ன குழந்தையைப் போல அளவில்லா குதூகலத்துடனும் ஒரு தாய்க்கு அடையாளமாய் இருக்க வேண்டிய நியாயமான கவலையோடும் அழைப்பு விடுத்தாள். எங்கள் பிள்ளைக்கு பத்து வயசுதான்


துலாபாரம்

 

 உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மகனிடமிருந்து வரப்போகும் தொலைபேசி வாழ்த்துக்கான எதிர்பார்ப்பு பரபரப்பு. தூக்கத்தில் எழாமல் போனால் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிக்கும் மகன் ஏங்கிப் போய்விடுவானே? எனப் பிடிவாதமாக நாற்காலியிலேயே விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிக்குப் பிறகோ, மகனிடமிருந்து வாழ்த்து வராமல் போன ஏமாற்றம் விசனம். அவனுக்கு பத்து வயசாகையிலா இல்லை அதற்கு முன்பேயா எப்போது ஆரம்பித்த பழக்கம்


உயிரின் உறவே

 

 கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள் அவனுக்குப் பின்னால் யாரையோ தேடின. “வாப்பா…! நல்லாயிருக்கியா…? வசந்தியையும் நந்தினியையும் அழைச்சிட்டு வரலியா?” “இல்லம்மா!” ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். உள்கூடத்தில் காலடிபட்டதும் மனம் ஒருவித அமைதியாகிவிட்டதைப்போல உணர்ந்தான். இருபத்தைந்து ஆண்டு காலம் அவன் தவழ்ந்து, நடந்து, ஓடி, விளையாடி வளர்ந்த வீடு. ஆங்காங்கே உதிர்ந்த காரை சுவடுகள். ஓரத்தில் கயிற்றுக் கட்டில்.


நிழற்படங்கள்

 

 நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக


காசும், காதலும்…

 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் உயிரற்ற உடலாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் மனைவி லதா ஓர் ஓரமாக வெறித்த பார்வையோடு இறுகி போய் உட்கார்ந்திருந்தாள் அருகில் மகன் சுரேஷும், மகள் சுபாவும் அழுதவாறு இருந்தனர். சுற்றிலும் உள்ள கூட்டத்தில் தெருவாசிகளும், நண்பர்களும், மீதம் அலுவலக சகாக்களுமாக இருந்தனர். அவளைக் கட்டிக் கொண்டு அழ உறவுகள் இல்லையானாலும், பக்கத்தில் உட்கார்ந்து தேற்ற நண்பர்கள் இருந்தனர். ஷாமியானா