கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

கொண்டாடினால் தப்பில்லை!

 

  காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு என்ன விசேஷம்… அமாவாசையா, கிருத்திகையா, வேறெதுவுமா என்று கண்களை கசக்கும் போதே, எதிரே கற்பூர ஆரத்தியுடன் நின்றாள் மனைவி அருணா. ஆரத்தியை தொட்டு என் கண்களில் ஒற்றி, “”சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கீசர் போட்டு வச்சுட்டேன்; தண்ணி சுட்டிருக்கும். புதுசு கட்டிக்கிட்டு கோவிலுக்கு போகணும். சித்தி விநாயகருக்கு அபிஷேகத்துக்கு சொல்லியிருக்கு. அப்படியே பாபுஜி முதியோர்


கதாநாயகன் தேர்வு!

 

 செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட ஆமைவடை, உளுந்து வடை, சமோசாக்கள் குவிந்திருந்தன. மேஜை இழுப்பறையைத் திறந்து, ஒரு சீட்டை எடுத்தார் உரிமையாளர். அதில், “கிளவுட் பைவ் புரொடக்ஷன்ஸ்’ கடன் பாக்கி, 1,328 ரூபாய் என போடப்பட்டிருந்தது. கடையின் எடுபிடியாக புதியவன் ஒருவன் சேர்ந்திருந்தான். அவனை, அழைத்தார் உரிமையாளர் … “”கொடுக்காப்புள்ளி தானே உன் பேரு?” “”ஆமா!” “”எதிர்த்த கட்டடத்ல சினிமா கம்பெனி


நீத்தார் கடன்!

 

 “புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், “புத்திரன்!’ பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்…’ ராமு சாஸ்திரிகள் அப்பாவின், 13ம் நாள் காரியத்தன்று ஆவேசம் வந்தது போல் சொன்ன வார்த்தைகள்… அப்பா பற்றி நினைக்கும் போதெல்லாம், முந்திக் கொண்டு வந்து வருத்துகிறது. “அப்பா எங்களுக்கு இங்கேயே சொர்க்கத்தைக் காட்டியவர். அவர் எந்த நரகத்துள் வீழ்ந்திருக்க முடியும்? அதுவும் நான் வந்து மீட்கும்படி?’ அவன் விரக்தியாய் சிரித்தான். “அப்பா சொக்கத் தங்கமாய் வாழ்ந்தவர். எங்களைப்


வானம் முடியும் இடம்!

 

 இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. “ஒரு தனியார் பள்ளி ஆரம்பித்து நடத்துகிறார் என்றால், மாப்பிள்ளை நல்ல வசதியாகத்தான் இருக்க வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டார். வாத்தியார் என்பதால், அடிப்படையாக, குறைந்தபட்ச ஒழுக்கத்திற்கு எந்தக் குறையும் இருக்காது என்று, அவர் மனம் கணக்கு போட்டு வைத்திருந்தது. கொஞ்ச தூரம் நடந்து வந்ததில், முகம் வியர்த்து, வழிந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து, முகத்தில் காற்று


வாசகர் தர்மம்!

 

 அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாதென்ற தீர்மானத்தில் இருந்தேன். சேலத்திலுள்ள வளர்மதி அலுவலகத்தில், 10:30 மணிக்கு இருக்க வேண்டுமென்றால், நான் இருக்கும் மேச்சேரியிலிருந்து, 8:00 மணிக்கு கிளம்பினால் தான் சரிப்படும். போகும் போது, பிள்ளையாருக்கு சதுர் தேங்காய் உடைத்து,