கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 27, 2013

9 கதைகள் கிடைத்துள்ளன.

மண(ன) முறிவு !

 

 பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா. கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து ஆபரேஷன் செய்து, இன்றோடு, மூன்று நாட்கள் முடிந்திருந்தது. “”அம்மா… இந்தாம்மா சாத்துக்குடி ஜூஸ்… குடிச்சுட்டு படுத்துக்குங்க.” மகள் ஆர்த்தி, படுத்திருந்த அம்மாவின் தலையை தூக்கி, டம்ளரில் இருந்த பழச் சாற்றை புகட்டினாள். “”ஆர்த்தி… நீயும் ஏம்மா என்னோடு சேர்ந்து கஷ்டப்படறே. நீ வீட்டில் ரெஸ்ட் எடு. வேலைக்காரி பாக்கியத்தை, ஆஸ்பத்திரியில் துணைக்கு வச்சிக்குறேன்னு சொன்னா, கேட்க


கழிவு நீரில் ஒளிரும் நிலவு

 

 இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார். “”யெஸ்…” “”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.” சங்கரலிங்கம் பெயரைக் கேட்டதும், மனதில் பரவசம் ஏற்பட்டது. எதிரில் உட்கார்ந்து பிசினஸ் பேசிக் கொண்டிருந்த கிளையன்ட்டுகளிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு, “”உடனே கனெக்ட் பண்ணுங்க…” என்றார் ஆபரேட்டரிடம். அடுத்த நொடி, லைனில் ஒரு திடமான குரல்… “”தம்பி சுந்தர்… நல்லா இருக்கீங்களா… என்னை நினைவிருக்கிறதா?” “”என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க… உங்களை எப்படி மறப்பேன். உங்கள் உருவத்தை என் மனசுல


விரியாத சிறகுகள்

 

 அந்தச் சிறிய நகரத்தை விட்டு, சிறிது தூரம் தள்ளி, ஊருக்கு வெளியே அந்தப் பெரிய கட்டடம் தலை நிமிர்ந்து நின்றது. வாயில் கேட்டிற்கு மேலே, “சக்தி ஸ்பின்னிங் மில்ஸ்’ என்ற போர்டு பளபளப்போடு வீற்றிருந்தது. உள்ளே, அந்தப் பெரிய கேட்டின் இருபுறங்களிலும், இரண்டு செக்யூரிட்டிகள் டிரிம்மாக காக்கி யூனிபார்ம் அணிந்து, சிறிது படப்படப்போடு வெளியே எட்டிப் பார்த்தபடி, யாருடைய வருகைக்காகவோ காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. காலை எட்டு மணி ஷிப்டுக்கு வர வேண்டிய தொழிலாளர்களை ஏற்றி வந்த


தேன் நிலவு

 

 செய்தியை கேட்ட கனகராஜ் ஆச்சரியப்பட்டார்; கூடவே, அனுதாபமும் வந்தது அவருக்கு. குமாரையும், அவனது மனைவியையும் பார்த்து, “அட்வைஸ் தரலாமே…’ என்று தோன்றியது. அதற்கான உரிமை கண்டிப்பாக கனகராஜுக்கு உண்டு. குமாரின் குடும்பத்தோடு, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக பழகியவராயிற்றே! அந்த செய்தி உண்மையானதா என்று, தன்னிடம் சொன்ன நபரை மீண்டும் கேட்டார்… “”அட… குமாரும், அவரது சம்சாரமும், லாரில பொட்டி சாமான்களோட தனியா போனதை என் கண்ணால் பார்த்தேன்… நான் உங்க அளவுக்கு நெருக்கம் இல்லாததால் ரொம்ப விசாரிக்க


தன்வினை !

 

 “”வசுந்தரா… என்னம்மா இது… அம்மா என்னமோ சொல்றாளே?” என, படபடத்தார் சதாசிவம். பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து பார்த்து, மீண்டும், “டிவி’யைப் பார்த்தாள். “டிவி’யில் ஏதோ உபன்யாசம் ஓடிக் கொண்டிருந்தது. “”இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியேம்மா… எதுக்காக விவாகரத்து நோட்டீசுலே கையெழுத்துப் போட்டே? அவசரப்பட்டுட்டியேம்மா!” அவர் குரல் உடைந்து தழுதழுத்தது. வசுந்தரா, “டிவி’யிலேயே கவனமாக இருந்தாள். “தசரத மகாராஜா தவிக்கிறார். கண்ணால ஜலம் விடறார். ராமரோ காட்டுக்குப் போக முடிவு பண்ணிட்டார். வனவாசம் போயே