கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 24, 2013

10 கதைகள் கிடைத்துள்ளன.

மாறுவது நெஞ்சம்…

 

 அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். ‘அவெ வந்திருக்கா…… கடப்பக்கம் போயிருக்காப்புல…’ அம்மா திடுக்கிடுவது தெரிந்தது. பதில் ஏதும் வரவில்லை. அது அம்மாவின் சுபாவம். அமைதியாகக் கொல்லைப்பக்கம் போனாள் அம்மா. ‘அவெ’என்ற விளி, அத்தையின் தம்பியை, அம்மாவின் கணவனை, என் தகப்பனை ஒரு சேரக் குறிப்பது. அம்மா, லோகுவை பிள்ளை பெறப் பிறந்த வீடு போயிருந்த போது, அப்பா என்ற அந்த மனிதர், அந்தச் சமயம், படிப்பதற்காக எங்களோடு வந்து தங்கியிருந்த அத்தையின் மகளை


கோணம்

 

 அன்று சென்னையில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து ஒரு கூட்டம். ஆனால் தலைமை தாங்கியதோ சிவகாசியில் மிகப்பெரிய பட்டாசு தொழிற்சாலையின் அதிபர்! சூர்யாவிற்கு எல்லாம் எரிச்சலையே ஏற்படுத்தியது. சூர்யா கீழ் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த 27 வயது இளைஞன். அந்த வயதுக்கேயுரிய துடிப்பும்,பொறுப்பும் மிகுந்தவன். தனக்கு கீழ் 2 தங்கைகள், 1 தம்பி திருமணமாகி சிறு வயதிலேயே சகோதரனிடம் அடைக்கலம் புகுந்த அத்தை என அத்தனை பேரின் தேவைகளையும் தந்தையின் ஒரு சம்பளத்தில் சாமர்த்தியமாக


காதல் மறுப்பு தினம்

 

 காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருந்ததை விட தன் சாதியையும் தன் சாதி மக்களையும் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தார். ஒரு சாதிக் கட்சியின் தலைவராக பத்து வருடங்கள் தாக்குப் பிடிப்பதற்கு அது தேவைதானே ? கடந்த சில வருடங்களாக தன் சாதி மக்களுக்கு எல்லா அரசியல் கட்சிகளின் மீது ஒரு வித ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டிருந்தது.


வீடு

 

 “சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார். இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர் குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர் வீட்டில் சந்திப்பு இருக்கும்.சில சமயம் இப்படி காந்தி பூங்காவிற்கும் வருவதுண்டு. பூங்காவில் செடிகளை கத்தரித்து கொண்டிருந்த முனிசாமி ” வணக்கம் சாமி” என்றார் கேசவனை பார்த்து.பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார்.


தோப்பில் தனிமரம்

 

 “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன் பண்ணியதும் எனக்குள் திக்கென்றது நான் பெரியம்மாவை பார்த்து ரொம்ப நாட்களாயிற்று.விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளே சரியாக இருக்கும்.போன மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற போது தெருமுனையில் இருக்கும் பெரியம்மாவின் வீட்டிற்கு போக டைம் இல்லாமல் ஓடி வந்து விட்டேன். “ என்னங்க நீங்க வர்றிங்களா..?” “ நீ மட்டும் போய் வா.. எனக்கு நிறைய வேலையிருக்கு..