கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 22, 2013

59 கதைகள் கிடைத்துள்ளன.

பட்ட மரம்

 

 அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை பார்த்துக்கொண்டு ஒறுக்களித்து பாயில் படுத்தபடி, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்களும், மூக்கும் சிதறிகிடக்கும் குப்பை கூளங்களையும், அணைத்து எறியப்பட்ட சிகிரெட் துண்டுகளின் நாற்றத்தையும் கண்டுகொள்ளவில்லை. சற்று திறந்திருந்த வெளிக்கதவு வழியாக காற்று, வீட்டின் உள்ளே அடிக்கும் வீச்சத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த


பூவினும் மெல்லியது…

 

 கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை காட்டுவது போல் லேசாக திறந்த கண்களின் வழியாக பிம்பங்கள் தெரிந்தன. இரைச்சல் மாதிரி கேட்கப்பட்ட ஒலி தெளிவின்றி காதில் கேட்டது, மெது மெதுவாக அதிகரித்த இரைச்சலில், அப்பா அம்மாவின் அழுகைச் சத்தமும், அண்ணா அண்ணா – என்ற தங்கையின் குரலும் கிணற்றுக்குள் இருந்து


ஓய்வுக் காலம்

 

 “அந்த முதுமைக்காலம் பலருக்கும் ஏதாவது ஒரு வழியில் கேள்விக் குறியாக இருக்கும் இந்த நிலைக்கு எப்போது வரும் விடிவுகாலம்?” ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதே ஒரு போராட்டமாய்ப் போய்க் கொண்டிருந்த எனது முப்பத்தைந்து வருட பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்து விட்டது. “இன்றைய பொழுது எப்படிப் போகுமோ ?” என்று அலுவலகத்திற்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் வேலையால் வந்த மன அழுத்தங்களும் அது தந்த விளைவுகளும் வேலையை விரக்தியாக்கி விட, குடும்பச் சூழ்நிலைகள் அந்த வேலையிலிருந்து விடுபட விடாமல்


கல்லூரி நினைவுகள்

 

 யாரோ பொட்டுப்பட்டாசை தரையில் போட்டு ஷூவால் தேய்த்து வெடிக்கும் சப்தம் கேட்டது, உடனே பாடம் நடத்திக்கொண்டிருந்த லெக்சரர் சரவணன் திரும்பிப் பார்த்து சப்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்தார். “யார்ரா இப்படி பண்ணது?” அவர் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே இன்னொரு பக்கத்திலிருந்து அதே போல் சப்தம் கேட்டது. அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க மீண்டும் இந்தப்பக்கம் வெடிக்கும் சப்தம். இவர்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு திரும்பி கரும்பலகைக்கு நடக்க யத்தனிக்கு நாலைந்து இடங்களிலிருந்து அந்தச் சப்தம் வந்தது. அவர் தான் கையில்


ஒரு கல்லூரியின் கதை

 

 காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக் காலேஜுக்கு சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் பாரு, டிபன் பாக்ஸை எடுத்து வச்சுக்கோ, புது காலேஜ் அங்கே கேண்டின் இருக்கோ என்னமோ, நான் கனகதாரா சொல்லிட்டு வந்துடறேன். சரியா, சரிம்மா, என் அம்மா இப்படித் தான், காலையில் குளித்ததும் கனகதாரா சொல்லிடுவா, உலகத்துல உள்ள எல்லாரும் நல்லா இருக்கணும், எல்லாருக்கும் உணவு கிடைக்கணும்னு வேண்டிக்கிற ஜீவன். நேர்பட