கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 21, 2013

3 கதைகள் கிடைத்துள்ளன.

மாயை

 

 “அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால் திரும்பியவன் அந்த மழலை பெண்ணை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். எதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்தான் அச்சிறு பெண்ணின் கொஞ்சும் முகபாவங்களில். அதே நேரம் அக்குழந்தையின் முகம் பரிச்சயமானதாய் நன்கு பழகிய உணர்வும் அவனுக்குள் பிஞ்சு விரல்களை அவன்முன் ஆட்டி தன்னிடம் அவள் வர சொல்ல அவனும் அவளது கட்டளைக்கு இணங்கி அவளின் உயரத்திற்கு


இளைமையில் வறுமை

 

 இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க வேண்டும். அவள் இங்கேயே தொடர்ந்திருக்கலாம், ஆனால் வேண்டு-மென்றுதானே என்னை விட்டுப் போகிறாள்! அவள் மீது எந்தத் தப்பும் இல்லை; எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாள். அவளைப் பார்க்க சதாசிவ நகரிலிருந்து மல்லேஸ்வரத்துக்கு வந்து போக, பஸ் டிக்கெட்டுக்குக் கூட பணம் கொடுத்திருக்கிறாள். பேசிக் கொண்டே நடந்து ஏதாவது தர்ஷிணிக்குள் நுழைந்து ‘ஒந்து காலி தோசா, எரடு காஃபி’


இங்கேயும் அங்கேயும்…

 

 வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள். துளிர்க்காத வியர்வையை ஒற்றியெடுக்கும் சாக்கில் ஒவ்வொருத்தியும் தன் கழுத்திலிருந்த நகையை சரி செய்து கொண்டே மற்றவர்கள் தன்னுடைய நகை, புடவையை கவனிக்கிறார்களாவென்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பஜ்ஜியின் மணமும், கேசரியின் நெய்மணமும் பரவி நின்று, காபியின் நறுமணத்துடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. கேட்பாரற்று வழிந்து கொண்டிருந்த மெல்லிய புல்லாங்குழல் இசையையும் மீறி ஓங்கி