கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 20, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்ச தண்ணி

 

 “என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும் அன்பும் கலந்தே இருந்தது அவளிடம். இன்று திருமணமாகி வேறொருவன் மனைவி ஆகிவிட்டாலும் அவளின் பால்ய வயது குறும்புத்தனம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாகி போனவள் சற்று உடல் பெருத்திருக்கிறாள் அவ்வளவே. உடலின் மாற்றங்கள் மனதை மாற்றுவதில்லை. வசதி வாய்ப்புகள் பெருகிய பின்பும் அதே மனநிலையில் அவள் இருப்பது தான் ஆச்சர்யம். மஞ்சள் தண்ணீர்


இரண்டாம் உலகம்

 

 “கூர்மையான நாசி,மை பூசி விட்ட கண்ணு ,நல்லா பெரிசா,சன்னமான புருவத்துக்கு கீழ.சாயம் படாத உதடு.தங்கம் இழச்சு பூசுன மாத்ரி கன்னம்.பறக்க விட்ட நீளமான முடி,காத அழகா ஒளிச்சு வெச்சு கொஞ்சமா காட்டிகிட்டு.எப்பவுமே சின்னதா போட்டு ஒன்னு வெச்சிருப்பா, நான் கலர் கவனிகரதில்லை .நல்ல நீளமான விரல் ,கைய பிடுச்சுக்கிட்டு நின்னுருக்கேன்.குண்டுனும் சொல்ல முடியாது ஒல்லினும் சொல்ல முடியாது.எட்ட நின்னு பாத்தாலே தெரியும் ஆம்பள பாப்பாத்தின்னு “,நிதானமாக, கண்மூடி,அனுபவித்து, வருடிபார்தார்போல சத்யா வர்ணித்து கூறுவது ப்ரவீனுக்கு ஆச்சர்யமாகத்தான் பட்டது.