கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 17, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் வீடு

 

 ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக் கதறுகிறார்கள். என்னை விடவும் அவர்கள் அப்பாவிடம் அதிகப் பற்று கொண்டிருந்‌தார்கள். சொல்லபோனால் என்னைவிடவும் அவர்கள் அப்பாவுடன் அதிக நேரம் செவழித்துள்ளார்கள். நீண்ட ஒல்லியான அவரது உடல் வெள்ளைத் துணியால் போர்த்த்ப் பட்டிருக்கிறது. அவர் எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்பா நிஜ வாழ்விலும் அப்படித்தான். அதிக நேரம் சிரித்த முகத்துடன் தான் அவரைப் பார்க்க முடியும்.


வானவில் காலம்

 

 அலைபேசி இனிய பாடலொன்றை வழியவிட்டதில் புகைப்படத்திலிருந்து தன்னிலைக்கு வந்தான் ரிஷி. அழைத்தவள் நந்தினி. இவள் எதற்கு?? யோசித்தவாறே எடுத்தவன், “சொல்லு” என்றான். “நான் நந்தினி பேசறேன்” “ம்ம்.. சொல்லு”. “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”. “என்ன??” போன்ல வேணாம். நேர்ல சொல்லறேன். இன்னக்கி சாயந்திரம் அஞ்சு மணிக்கு நாம வழக்கமா சந்திக்கிற பீச்சுக்கு வரமுடியுமா?” “அஞ்சு மணிக்கா? நான் முக்கியமான ஒருத்தரை மீட் பண்ணணுமே”. “ஓ.. அப்படியா!” ஏமாற்றம் தொனித்தது அவள் குரலில். “அப்போ நாளைக்கு?” சற்றே


அரிசி சோறு

 

 அடியே நானும் அஞ்சு பிள்ளை பெத்தவதான் இந்த மாதிரி கொவட்டிகில்ல என்னமோ ஊரில இல்லாத வயித்துபிள்ளை காரி மாதிரி இந்த கொவட்டு கொவட்டரியே சும்ம கம்ப அள்ளிபோட்டு கல்ல சுத்துவியா என , சிட்டு பாட்டி சத்தம் போட அரசி தனது வேதனையும் தாங்கிகொண்டு அரகல்லில் கம்பரிசியை அள்ளி போட்டு சுத்த ஆரம்பித்து விட்டால், தனது முதல் வகுப்பில் போகும் தன் மகனை பார்த்து டேய் அம்மாவிற்க்கு கொஞ்சம் தண்ணீர் கொடுடா, என சொல்ல அவனும் பெரிய


அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!

 

 அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன் தம்பதியினர்தான் காரணம். இருவரும் படித்த பண்பு மிக்கவர்கள். தாம் வாழும் கிராமம் ஒரு முன் மாதிரிக் கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயலாற்றும் செயல் மறவர்கள். அறிவழகன் மனிதப்பணியில் புனிதப்பணியாம் ஆசிரியப்பணியைச் செய்பவர். அலுவல் நேரம் போக மீந்த நேரங்களில் தன் பொன் பொழுதுகளை தான் சார்ந்துள்ள கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஓர் தன்னார்வலர்!


மனத்தில் மாசிலா மணியே போற்றி!

 

 ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,”அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை செய்த சிறப்பு முற்காலத்தில் அரசர்கள் கூடச் செய்திருக்கமாட்டார்கள்” என்றார் ஒருவர். “பின்னே கண்ணைப்பறிக்கும் ஒட்டியாணம் அம்மனுக்கே புது மெருகல்லவா? வேறு யாருஞ் செய்ய இயலாச் சிறப்பு அய்யா,” என்றார் இன்னொருவர். “அம்மன் கோயில் உள்ளவரை அய்யா பேர் இருக்கும்!” என்று ஒருவர். கூடியிருந்தவர்கள் புகழப்புகழ உற்சாகத்தில் மிதந்தார் ஆளவந்தார். ஆளவந்தார் அந்த சுத்துப்பட்டி கிராமங்கள் அறிந்த ஒரு