கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 14, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளை நிற பாம்பு

 

 அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப் பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின் வ்ழியே புகும் வெளிச்சம் அவனுக்கு போதுமாயிருந்தது. அந்த அறையிலிருந்த‌ முகம்பார்கும் கண்ணாடியை அவன் திருப்பிவைத்த நாளில்தான் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றது. பலமுறை அம்மா அந்த கண்ணாடியை சரியாக வைத்தாலும் அடுத்த சிலநிமிடங்களில் அவன் திருப்பிவைத்துவிடுவான். அம்மாவின் நசுங்கிய வளையல்களைப்போல கூரைப்பொத்தல் வெளிச்சம் கிடந்தது.


வைத்தியம்

 

 பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை, தற்கொலை செய்வதற்குக் கீழே பாய்கிறேன் என்று அவர் தவறுதலாக எடுத்துக் கொண்டார். அவரது புருவங்கள் உயர்ந்து, நெற்றி சுருங்கியது. அவர் என் மேல் கோபப் பட்டார் என்று சொல்ல முடியாது; ஆனால் வருத்தப் பட்டிருந்திருப்பார். கண்டிப்பாக பதைத்துப் போயிருந்தார். பஸ்ஸிருந்து இறங்கியதும், சபர்பன் ரயிலைப் பிடிக்க, ஸ்டேசனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நான் வேளச்சேரி ரூட்டில்,


நண்பேண்டா!

 

 இல்லை என்பவன் வாழத்தெரிந்தவன் காலம் அப்படி! – கலியுகன்நண்பேண்டா காலிங்பெல் இரண்டாவது முறை அடிக்கவும், மனோகர் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.. எதிரில் அவனது கல்லூரி நண்பன் வேலு. ஒடுங்கிய கன்னங்களில், சவரம் பார்க்காத சில நாள் தாடியில் ‘கஷ்டம் டா’ என்று சொல்லாமல் சொல்லி நின்று கொண்டிருந்தான். “டேய் வேலு.. எங்கடா இங்க? உள்ள வா..” மனோகர் நிஜமான உற்சாகத்துடன் அழைத்தான். “உன் அட்ரஸ் குரு கொடுத்தான், நம்பரும் கொடுத்தான், நான் அடிக்கலை!” “எப்படிரா இருக்க?