கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 11, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவைத் தேடி

 

  பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி, தன் இரண்டு தங்கைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்து, அப்பனுக்கு பயந்து குடிசை திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். “”பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுக்கிட்டு, வாயா பேசற… இதபாரு… வேலைக்கு போயி நல்லாதானே சம்பாதிக்கிறே… வந்து காசு கேட்டா வாயை மூடிகிட்டு கொடுக்கிறதை விட்டுட்டு, திமிர்த்தனமா பேசற?” கீழே விழுந்தவளை, காலால் எட்டி உதைத்தான். “”நான் கஷ்டப்பட்டு


தூங்கும் நாகம்

 

 கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க, பார்க்க, எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை, இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம், மெல்லிய வார்த்தைகளாய் கேவலுடன் வெளிப்பட்டது. “டேய்! என்னை ஏன்டா ஒருத்தி கூட லவ்பண்ண மாட்டேங்கிறா?’ நான் சொன்னதை, அவன் அப்படியே வழிமொழிந்தான். சத்தமில்லாமல் அழுதேன்; அவனும், என்னுடன் சேர்ந்து அழுதான். “நல்லா படிச்சும், பாட்டு பாடினால் மட்டும் போதாது மாமு… லவ்வுக்கான மேட்டர் உங்கிட்டே எதுவும் இல்லையே, என்ன பண்ணறது?’ மனசு சொன்னது; அது உண்மை


அக்னி

 

 அவள் எழுந்து போன பிறகும் கூட, அவள் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் என்னை தகித்தன. என்ன பெண் இவள்… படித்து, பட்டம் பெற்று, கவுரவமான குடும்பத்தில் பிறந்து, நல்ல வேலையில், கை நிறையச் சம்பளமும் வாங்கிக் கொண்டு, இன்று காரும், நல்ல வேலையில் உள்ள பிள்ளைகளும் உள்ள ஒரு பெண்ணால், ஏன், என்றோ நடந்த நிஜத்தை சொன்னால், சகித்துக் கொள்ள முடியவில்லை? “உங்க மாதிரி பொழுது போக்கத்த எழுத்தாளர்களுக்கு, என்னை மாதிரிப் பெண்களின் வாழ்க்கை தான்