கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 11, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடிப்போன பிள்ளை

 

 கொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு மண்சட்டியில் ஜிலேபி கொண்டை மீன் சுத்தமாக கழுவப்பட்டு, குழம்பில் கொதிப்பதற்கு காத்து இருந்தது. மசாலா அரைத்து, மகனுக்கு பிடிக்குமென்று புளியை சற்று தூக்கலாக விட்டு, குழம்பை கரைத்தவள், நல்லெண்ணெயில் தாளித்து, குழம்பை அடுப்பில் ஏற்றினாள். மீனுடன் சேர்ந்து குழம்பு மணமாக கொதிக்க ஆரம்பித்தது. அந்த பழைய கால ஓட்டு வீட்டை, ஒருமுறை நோட்டமிட்டாள். வீட்டுக்கு சொந்தக்காரர், தன்


நேர்முகம்

 

 அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து, கையில் பைல்களுடன், முகத்தில் எதிர் பார்ப்புடன், ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்திருந்தனர். உதட்டுச்சாய இதழ்களில், நுனி நாக்கு ஆங்கிலம் தவழ, புன்னகை யுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளினி, ஒவ்வொருவரின் பெயரையும் மென் மையாக அழைத்து, அவர்களின் பைல்களை வாங்கி, அதிலிருந்த சான்றிதழ்களைப் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தாள். அவர்கள் எல்லாருமே, அந்தப் புதிய நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்


முத்துநகர் எக்ஸ்பிரஸ்

 

 எழும்பூர் ரயில் நிலையம். பயணிக்க வருவோரும், பயணித்துப் போவோரும் சுறுசுறுப்பாய் இயங்கியதால், பரபரப்பாக இருந்தது. டிக்கெட் வாங்கி பையில் பத்திரப்படுத்தி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தேன். டிக்கெட் ரிசர்வ் செய்யாததால், அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடம் நோக்கி நடந்தேன். ஒரு வழியாய் கண்டுபிடித்து, ஏறி அமர்ந்தேன். கடைசி நேரத்தில் ஓடிவந்து, முண்டியடித்து ஏறி, இடம் கிடைக்காமல், இரவு முழுவதும், தூக்கத்தையும் கெடுத்து, நின்று கொண்டேயல்லவா போக வேண்டிவரும் என்பதை மனதில் கொண்டு தான்,


தாயில்லாமல் நானில்லை

 

 “”டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா… மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்… கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க…” “”கையக் கொடுரா… இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,” எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான். “”கல்யாணம் என்னிக்கு?” “”பிப்ரவரி 15.” “”பிப்ரவரி 15ஆ?” “”ஏன்… அதுல என்ன பிரச்னை?” “”அன்னிக்கு அம்மா பர்த்டேடா… மறந்து போய்ட்டியா?” “”அடக் கடவுளே!” தலையில் கை வைத்துக் கொண்டான் எட்வர்ட். ஜானும், எட்வர்டும் இரட்டையர்கள். பெங்களூருவின்


ஆர்மி மேன்

 

 எலக்ட்ரீஷியனின் விரல்கள் வேகமாக செயல்பட்டாலும், வேலை முழுமை பெறவில்லை. ஒரு பேனை கழற்ற அரை மணி நேரமும், வாஷ் பேஷின் குழாயை கழற்றுவதற்கு கால் மணி நேரம் என்பதும் அதிகம். அவரால் முடியவில்லை; ஆனாலும், சோர்ந்து போகாமல் செயல்பட்டார். மேஜை மேல் டீயை வைத்த ராஜியின் வேகத்தில், கோபம் தெரிந்தது. “இப்படி ஒரு ஸ்லோ பார்ட்டியை அழைத்து வந்து என் உயிரை வாங்கு கிறீர்களே…’ என்று பார்வையாலேயே கேட்டதை, என்னால் உணர முடிந்தது. சேரில் அமர்ந்து எலக்ட்ரீஷியனை