கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 11, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

தகுதி

 

  சோபாவில் சாய்ந்தபடி மிகப்பெரிய பிளாஸ்மா, “டிவி’யில் ஆங்கில நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, எதையோ நினைத்துக் கொண்டவளாய், “விருட்’டெனத் திரும்பினாள். “”அம்மா… தாத்தா எங்கே?” “”கொஞ்சம் வெளிய போயிருக்கார் கண்ணு; இப்ப வந்துடுவார்…” என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. கையில் காகிதக் கற்றையோடு பெரியவர் உள்ளே நுழைந்தார். “”ஈஸ்வரி… ஊர்ல இருக்கற அத்தனை புரோக்கர்களையும் பார்த்து, கெடைச்ச ஜாதகங்களை வடிகட்டி, இருபது ஜாதகங்களைக் கொண்டாந்திருக்கேன்.


நடிகை

 

 ம் முழுவதும் அண்மைக் காலமாகப் பேச்சு. இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து, அவை வெற்றியும் பெற்றதிலிருந்து படத் தயாரிப்பாளர்கள், இருவரையும் வைத்துப் படங்களை எடுப்பதில் ஆர்வமாயினர். காதல் தோல்வியுறுவதாய் காட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், இருவரும் உருகி உருகி நடித்திருந்தனர். “இருவரும் உண்மையாகவே காதலர்களாக இருந்தாலன்றி, அப்படி ஒரு நடிப்பு சாத்தியமே அன்று…’ என்று முடிவுகட்டிய மக்கள், இருவரும் உண்மை வாழ்விலும், காதலர்களே என்றும், முடிவு செய்து விட்டனர். பத்திரிகைகளும் அந்த இருவரையும் பற்றிய பொய்களையும், உண்மைகளையும்,


பூவும், கல்லும்

 

 படுக்கையில், வாடிய கீரைத்தண்டாய் சோர்ந்திருக்கும் மனைவி சுசீலாவை, கவலை பொங்க பார்த்த பத்மநாபன், அப்படியே அவளின் நாடியை பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தான். டாக்டரின் முகத்தில், நம்பிக்கை ரேகை தென்படவில்லை. ஆஸ்பத்திரியில் சொல்லிதான் டிஸ்சார்ஜ் செய்தனர்… “ஒரு வாரம் தான் தாங்கும்… வீட்டுக்கு கொண்டுபோய் அவங்க விருப்பப்பட்டதை கொடுத்து வழியனுப்பிடுங்க…’ என்று. மருத்துவர் குழு தீர்மானித்த பின்னும், உள்ளூர ஒரு எண்ணம். ஓடிப் போய், தெரிந்த டாக்டரை வீட்டுக்கு அழைத்து வந்தான். பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு


ஒண்ணுக்கு நாலு

 

 “”கோபால் சார்… கோபால் சார்…” என்று வாசலில் குரல் கேட்டது. குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின் செவிகளில், அவரை யாரோ வீட்டு வாசலில் நின்று கூப்பிடுவது கேட்டது. “”சரசு… வாசல்லே யாரோ என்னை கூப்பிடற சத்தம் கேட்கறது. பூஜை செஞ்சுண்டிருக்கேன். சித்த போயி யாருன்னு பாரு…” என்றார் கோபாலன். சமையலில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி சரசுவதி, அடுப்பை அணைத்துவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்து, கழுத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்து பார்த்தாள். ஏழெட்டு பேர்,


ஸாரே ஜஹான்ஸே அச்ஹா

 

 அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும் அவருடைய பேத்தி. மேடை ஏறினால், ஏவுகணையாக மாறி, எதிர்க்கட்சிகளை வசைப்பாடும் தமிழ்நேசன், வீட்டிற்கு வந்தால், பேத்தியின் மிரட்டல்களுக்கு பணிந்து போவார். அவரை குதிரையாக்கி, அவர் மேல் உட்கார்ந்து ஷாலினி சவாரி போவது, கண்கொள்ளாக் காட்சி. அன்றும் அப்படித் தான் நடந்தது. அதைப் பார்த்து குடும்பத்தினர் ரசித்தனர். “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா, இந்துஸ்தான் ஹமாரா…’ என்று, ஷாலினி