கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 10, 2013

32 கதைகள் கிடைத்துள்ளன.

மலர்ந்த மனம் போதும்!

 

 ஹாலில் அமர்ந்து ரீனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஆளரவம்; கூடவே, பெண்களின் கிசுகிசுப்பு. “”இதுதான் வனிதா வீடு! பார்… எத்தனை பெருசா, பங்களா மாதிரி இருக்குன்னு! வர யோசிப்பா தான்… ஆனா, வந்தா முன்னூறு, நானூறு ரூபா அன்பளிப்பா குடுப்பா… அதான் அழைக்கலாம்ன்னு வந்தேன்!” “அட… இது சித்தி குரலாச்சே?’ வனிதா எழுவதற்காக, ரீனாவை சோபாவில் கிடத்தியபோது, சித்தி மகள் சுந்தரியின் குரல்… “”வனிதாக்கா வந்தா, அவங்களை வளையல் போட விடுவீங்களாம்மா?” “”நல்ல கதை! எவ விடுவா?


திருப்பம்!

 

 குமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டியதாயிற்று. தான் செய்வது சரியன்று என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது; இருப்பினும், அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில், சில தவறுகள் நியாயமானவை என்று அவள் தனக்குத் தானே சமாதானம் கற்பித்துக்


சிபிகளும் புறாக்களும்

 

 என் பதிலை எதிர்பார்த்து பாரிஜாதம்மாள் நின்று கொண்டிருந்தாள். என் வளர்ப்புத்தாய். அவள் சொன்னது எனக்குள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கி விட்டிருந்தது. ஆனாலும் எனது பதற்றத்தை வெளிக்காட்டாமல் வெகு இயல்பாக இருப்பது போல் நின்று கொண்டிருந்தேன். மனபாரத்தை இடம் மாற்றிவிட்ட தற்காலிக நிம்மதியில் அவள் நின்று கொண்டிருந்தாள். வலது கை வரண்டாத் தூணை கெட்டியாகப் பற்றியிருந்தது. அதில் மெலிதானதொரு நடுக்கம். அவளை உள்ளே வந்து உட்காரச் சொல்லி நானும் அவரும் பலமுறை கூப்பிட்டுப் பார்த்திருக்கிறோம். வரவே மாட்டாள். ஏதோ


மனதோடுதான் பேசுவேன்!

 

 புதுக்கோட்டைக்குச் செல்வதற்கு வழக்கம்போல் காரைக்குடி – மானாமதுரை வரை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். கையில் அன்றைய தினப் பத்திரிகை. படிப்பில் ஆழ்ந்திருந்தபோது, “”நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா?” என்ற குரலோடு, என் அனுமதியைப் பெறுவதற்கு முன்பே ஒருவர் என் பக்கத்தில் உட்கார்வதை உணர்ந்து பட்டென்று திரும்பினேன். என் எதிரே உள்ள இரு இருக்கைகள் காலியாக இருக்க என் பக்கத்தில் வந்து அவ்வளவு உரிமையோடு உட்காருபவர் யார்? என் பார்வையை அவர் பக்கம் திருப்பியதும் அப்படியே அசந்து


அப்பாச்சி

 

 கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும்,சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட தொழிற்சாலை இயந்திரங்கள் கக்கும் புகை மூட்டத்தோடும் தொடங்கியது. பாஸ்போர்ட் எடுப்பதில் தொடங்கி பிச்சை போடுவது வரை எல்லாவற்றிற்கும் கியூ,அதிகாலையிலேயே பாம்பு போல நெளிந்து பல கிலோமீட்டர் வளைந்து நெடு நீண்டு வளர்ந்திருந்தது… இப்படியாய் அன்றும் விடிந்தது ஒரு கார்ப்பரேட் காலைப் பொழுது. ஆம், சுதந்திரத்திற்காகப் போராடி பின் உடைந்திருந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த போராளிகள் மீட்டுக்