கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 7, 2013

23 கதைகள் கிடைத்துள்ளன.

இதயங்களில் ஈரமில்லை !

 

 அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன் என்று அவளைப் பார்த்தவர்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஆகிருதி. அவளுடைய அந்த ஆகிருதி தான் அவளுக்கு அந்த ஹாஸ்டல் வார்டன் வேலையைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவள் மனசு பூ மாதிரி லேசானது என்பது வெகு சிலருக்கே தெரியும். வேணியின் சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். சிறு வயதிலேயே தாயை


நிரூபணம்

 

 அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம் தப்பித்து பிசாசிடம் வந்த கதை. ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் தாயான பின் அவர்களுக்காகவே வாழ்க்கையை வாழத் தொடங்கினாள். காலம் எத்தனை விரைவில் போகிறது. எனக்குக் கல்யாணமாகி என் பெண்ணுக்கே மூன்று வயதாகிறது. என்னை வளர்த்த அதே அம்மாதான் அண்ணனையும் வளர்த்தாள். ஆனால் அவன் மனதில் மட்டும் எப்படி பாசம் இல்லாமல் போனான் என்பது எனக்கு இன்று


புதுச் செருப்பு

 

 ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில் இருக்கும் செருப்பை விழிகள் விரிய வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? ஐ ஆம் ராஜசேகர்- மாஸ்டர்ஸ் டிகிரி. அண்ணாசாலையில் நாலு மாடிக் கட்டடத்தில் இயக்குகிற ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் செலக்ஷன் கிரேட் அசிஸ்டெண்ட். ஐந்து இலக்க சம்பளம். நெட் சாலரி விவரம் பின்னால வருது. ஒரு தாய், ஒரு தாரம், ஒன் ப்ளஸ் ஒன்


புரிந்தும் புரியாமலும்…

 

 பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என் நாவில் கற்கண்டாய்த் தித்திக்கிறதே! அவளது மழலை மொழி கேட்டால் தேவாமிர்தம் பருகியதாகவே உணர்கிறேன். அவள் துள்ளி விளையாடும் அழகோ பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகிறது. “ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி!’ என்று என்னமாய்ப் பேசுகிறாள்! வாய் திறந்தால் மழலையில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. இரண்டரை வயதுதானென்றால் யார் நம்புகிறார்கள்? இயல்பாகவே பெண்


தண்டனை

 

 பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள். “”கடவுளே… ஊர் போய்ச் சேர்ற வரைக்கும் என்னோட அழுகாச்சியை அடக்கி வை…” பார்வதி, அமுதாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மத்தியான நேர வெயிலில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. பார்வதியால் நிம்மதியாக நிற்க முடியவில்லை. குமரேசனை நினைக்க நினைக்க அவளுக்குள் ஆங்காரமும் கோபமும் பொங்கி வந்தது. “நீயெல்லாம் ஒரு