கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

 

 ”நீ என்னிய லவ் பண்றியா?’ – குல்பி ஐஸின் மேல் நுனியைப் பல்லால் சுரண்டிச் சுவைத்துக்கொண்டு இருந்த ஹேமா கண்களை விரியச் செய்தபடி கேட்டாள். ட்ரை சைக்கிளில் வைத்திருந்த ஐஸ் பெட்டியில் இருந்து குல்பிகளை ரப்பர் பேண்ட் சுற்றி அடுக்கிக்கொண்டு இருந்த அவன், எச்சிலை விழுங்கிக்கொண்டான். நல்லவேளை அந்த நேரம் தெருவில் யாரும் இல்லை. தூரதூரமாகத்தான் வீட்டு வாசல்களில் பெண்கள் அவரவர் பாடுகளில் மூழ்கி இருந்தனர். பள்ளி முடிந்து வந்த பிள்ளைகளுக்கு உடைமாற்றிவிடுவதும் தனக்குத் தலைசீவி பேன்


நான் அவன் அது…

 

 ‘மார்கழி மாசக் குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக் குளிரு தரையத் துளைக்கும்’ என்ற அம்மாச்சியின் சொலவடை ஞாபகத்துக்கு வந்தது. தை மாசப் பனி, தரையைத் துளைத்துக்கொண்டு இருந்தது. வீட்டின் சாவித் துவாரத்தைக்கூட மூடியாகிவிட்டது. மெத்தை, போர்வை, எதுக்கும் கட்டுக்குள் வராதுபோல், பனி தன் முழு ஆவேசத்துடன் ஆடிக்கொண்டு இருந்தது. அதிகப் பனி, தற்காலிகத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. கிச்சன் பக்கம் போய் ஒரு இஞ்சி டீ போட்டுஎடுத்துக் கொண்டு டி.வி. இருந்த ஹாலுக்கு வந்து சோபாவுக்குள் என்னைப்


இது பாம்புக்கதை அல்ல

 

 ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல் வந¢தது. நான¢ த¤ரும்பிக் குன¤ந¢து பார்ப¢பதை அற¤ந¢து, பாம்புகளைத் தவ¤ர வேறு எதையும¢ பத¢த¤ரப¢படுத¢த¤வைக¢க முடியாத அந்தப் பிரத்யேக மூங¢க¤ல¢ கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காட்டினான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்துஇருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இது வரை நான் எந்தப் பாம்பையும் பார்த்தது இல்லை. என் கையில் உரசும்


பொம்மை

 

 மதிப்புக்கு உரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு… வணக்கம். நலம். நலமறிய ஆவல். என் பெயர் விமலா. கோயம்புத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்கு முன் உங்களுடைய வெப்சைட் வழியாக ஒரு பொம்மை வாங்கிஇருக்கிறேன். இதற்கு மேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகம் செய்துகொள்வது என்று தெரியவில்லை. உண்மையில், வெப்சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனே தவிர, அப்படி என்றால் என்ன அர்த்தம் என்பதுகூட எனக்குத் தெரியாது. ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம்’ என்று


மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு

 

 தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான உணர்வு மேலிட்டது. மின்சாரமும் மின் விளக்கும் இல்லாத அந்த இடத்தில் அவனது தலையணைக்கு அடியில் பேட்டரி லைட் இருந்தது. சுற்றிலும் மேலும் கீழுமாக வெளிச்சம் பாய்ச்சினான். உழவுக் கருவிகளும் உணவுக்கான பொருட்களும் போட்டு வைக்கப்பட்டு இருந்த ஒற்றை அறை திறந்தேகிடந்தது. அங்கே கதவு கடந்து பார்த்தபோது, நாழி ஓட்டுக் கூரையின் தாங்குக்காகப் போட்டு இருந்த விட்டத்தின்


அதனதன் வாழ்வு

 

 ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். நாச்சார் அவரைச் சலிப்புடன் பார்த்தாள். மனைவிமார் புருஷன்மாரைப் பார்க்கிற பார்வைகள் ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப மாறுகின்றன. கல்யாணம் முடிச்ச புதுசில் எதுக்கெடுத்தாலும் சிரித்த படி ஒரு நாணப் பார்வை. பிள்ளை பெற்ற பின் கொஞ்சம் பெருமிதம் கலந்த அலட்டல் பார்வை. அது மெதுவாக அதட்டல் பார்வையாக மாறி, வருடங்கள் சில சென்றதும் சலிப்புப் பார்வையாக,


குட்டிக் காதலின் வரலாறு

 

 ‘பிரிய மகேசுவரி, பார்த்தும் பாராததுபோல உதறி நடக்கும் உன்னைப்போய் என் இதயத்தில் நட்டுவைத்தேன் பார், நன்றாக அனுபவிக்கிறேன் கிளை படர்ந்து. என் மனம் எங்கெங்கோ தவித்து அலைந்த தருணத்தில், நீ ஒரு திசைகாட்டியாகத்தானே வந்தாய். திசையைக் காட்டிவிட்டு நீ ஏன் திரும்பிச் சென்றாய்? நாவுகள் நிஜம் பேசும் என்பது நம்பத் தகுந்தது அல்ல என்பதை நல்லவேளை நீயும் நினைவுபடுத்திவிட்டாய். நீ கண்ணீருக்கும் கவிதைக்கும் அடித்தளம் போட்டுவிட்டு, ஒரு கேள்விக்குறியையும் விதைத்துவிட்டுப் போய்விட்டாய். வாழ்க்கை நோக்கிப் பயணித்த பாதங்களில்


நாடகம்

 

 ஹோயே… ஹோ… அலைகளின் பேரிரைச்சலை மீறி, கடல் அரக்கர்களின் ஓங்காரக் குரல் எழத் தொடங்கிவிட்டது. சூறைக் காற்றின் ஆரவாரத்தோடு பெரு மழைக்கான அறிகுறிகளுக்கு இடையே, இளவரசி கடல் பூதத்தால் கடத்தப்பட்ட கதையைக் கட்டியக்காரன் சொல்லிக்கொண்டு இருந்தான். நீல தேசத்து இளவரசியைக் காப்பாற்ற இன்னும் அரை மணி நேரமே உள்ளது. வேலன் தன் ஓலைத் தொப்பியைத் தலையில் மாட்டியபடி துடுப்பைக் கையில் எடுத்துக்கொண்டு குறுவாளைத் தேடியபோது, அவனுடைய செல்போன் ஒலித்தது. i don’t wanna live with u.


தாலி பாக்கியம் – திருக்குறள் கதை (102)

 

 காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு. ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன். மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி……… நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. ராஜி சாலையைக் கடந்து மறுபக்கத்தில் உள்ள