கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

312 கதைகள் கிடைத்துள்ளன.

மழைக் காகிதம்

 

 வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த அக்காவான பாப்பாத்தியின் வீட்டுக்காரர், வேலப்பனின் பங்காளி சுப்ரமணியத்திடம் விசாரித்துக் கொண்டிருந்தார். “”ஏதோ,வாரம் போகுது.. ஒண்ணும் சரியில்லீங்க மச்சான். ஆளு பாடு தான் பெரும் பாடு”-புலம்பினான் சுப்ரமணி. எலெக்சன் முதல் இந்நாள்அரசியல் வரை…ஓடிக்கொண்டிருக்க… வேலப்பன் மட்டும், நிலத்தையே வெறித்துக்கொண்டிருந்தான். அய்யன் இறந்து மூணாவது நாள்…சாதி சனங்க எல்லாம் விருந்தில் மூழ்கி,சொந்த பந்தங்களைக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். நாலு நாளுக்கு


அம்மாவைத் தேடி…

 

 வான்கூவரிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை வந்திருந்தான் ஸ்ரீராம். கூடவே அவன் மனைவி அகிலா, வெள்ளை நிற ஜில்லி நாய்க்குட்டி, ஐந்து வயது மகன் கெüசிக். விமான நிலையத்தில் பூச்செண்டு கொடுத்து அவனது மாமியாரும், மாமனாரும் வரவேற்றனர்; கை குலுக்கினர். கெüசிக்கை தூக்கி வைத்து முத்தம் கொடுத்து சாக்லெட் கொடுத்தனர். அகிலாவிற்குத் தன் பெற்றோரைக் கண்டவுடன் ஆனந்தம் பிடிபடவில்லை. காரில் ஏறியதிலிருந்து கதை கதையாய் கனடா வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டே வந்தாள். தான் பார்க்கும் வேலை, கணவன்


கண்ணால் காண்பது மெய்

 

 நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ’ என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும் என்பதை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்தப் பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன்


பழி

 

 இருபது வீடுகள் கொண்ட எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தள முதல் வீட்டில் குடியிருப்பவர் வாசன். நல்ல வேலையிலிருந்தபோது, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த இளம் மனைவி துர்காவை, மார்பகப் புற்றுநோய்க்குத் தாரை வார்த்து, தாயில்லா பச்சிளம் குழந்தை திவ்யாவுக்காகத் “தாயுமான’வர். வேலையை விட்டுவிட்டு, முழுநேரத் தாயும் தந்தையுமானார். யாருடைய உதவியும் இல்லாமல், திவ்யாவை இருபத்தி நாலுமணி நேர கவனிப்பில், சமைப்பதிலிருந்து, பாத்திரம் கழுவித் துணி துவைப்பது, பள்ளி, மாலை நேர ட்யூஷனுக்கு அழைத்துச் செல்வது


பெண்டாட்டிதாசன்

 

 இந்தப்பயல் இப்பிடி மாறுவான்னு நான் கனவுல கூட நெனச்சிப் பாக்கல்ல. இந்தக் கருவாலிக்குட்டி வந்து, என்ன மாயம் பண்ணினாளோ? இவன் இப்பிடியாகிட்டானே?” என்று கூறுவது கணவனின் இரண்டாவது அக்காவின் குரல் என்று கமலாவுக்குத் தெரிந்தது. அறையிலிருந்தவள் காதை வெளியே கவனப்படுத்தினாள். “”அதானே சரக்கு இப்பிடி இருக்கிறப்பவே இந்த ஆட்டம் ஆடறான்னா, கொஞ்சம் வெள்ள சொள்ளையா இருந்திருந்தா, பயல கைலப் பிடிச்சிருக்க முடியாது போல இருக்குது?” என்றது மூத்த அண்ணியின் குரல். “”அக்கா, உள்ள கேட்டுட்டிருப்பா. அவன் வந்ததும்