கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

நிலம் எனும் நல்லாள்

 

 சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?” ”இல்லையே, இது என்ன கேள்வி?” ”அமெரிக்காவின் சனத்தொகையிலும் பார்க்க அங்கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாமே.” ”இது அமெரிக்கா அல்ல மகனே, கனடா.” ”பக்கத்து வீட்டுக்காரர்களிடம் துப்பாக்கி இருக்குமா?” ”ஏணி கடன் கேட்பதுபோலப் பக்கத்து வீட்டில் போய் இரவல் கேட்கப்போகிறாயா? யேசுவே, என்ன நடக்கிறது இங்கே?” ”இல்லை அம்மா, ஒரு பாதுகாப்புக்குத்தான்.” ”இங்கே உனக்கு எதிரிகள் இல்லை. நீ சுதந்திரமாக உலாவலாம். இது


பெருந்தவம்

 

 மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். எப்படிப் பார்த்தாலும் நூற்றிருபது, நூற்று முப்பது ராத்தல் இருக்கும். சிவனாண்டி நல்ல சுமட்டுக்காரன். இருபத்தைந்து ஆண்டுகளாக மலை ஏறுகிறான். மலைக் கூப்புகளில்


சந்தானத்தின் மாடி வீடு

 

 புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின் கேரக்டர். தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சந்தானம் முன்வைக்கிற கண்டிஷன்களாலேயே, சென்னையில் பிரபலமாகி இருந்தார். சந்தானம் வாடகைக்கு விடுவதாக இருப்பது அவர் குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷன். சந்தானம் எப்போதுமே நாளையைப் பற்றி சிந்திக்கிறவர் இல்லை. அதற்கு மறுநாளை மட்டுமே சிந்திக்கிறவர். ஊரே சாலையில் பயணித்தால், சந்தானம் மட்டும் இருப்புப் பாதையில் பயணிப்பார். இதில் என்ன


மழைக் கஞ்சி

 

 ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, சர்வதேச விதிமுறைகள் எதையும் லட்சியம் செய்யாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். எக்கச்சக்கமான வெயிலைக் குடித்துக் கறுப்பேறி இறுகிப்போன அந்தப் பட்டியக்கல் எடுத்துக் கட்ட வழியற்று மேடையில் இருந்து சரிந்துகிடக்கிறது. ஆசன வாயில் வெப்பம் ஏறிவிடாமல் பட்டியக்கல் மேல் போட்ட துண்டுக்கு நோவாது பட்டும் படாமலும் உட்கார்ந்திருக்கிறார் ஊர்ப் பெரியவர். புருவ


அடையாளம்

 

 பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சைக்காகத்தான் முதன்முதலாக எங்களுக்கு ‘அங்க அடையாளம்’ எடுத்தார்கள். ”எல்லாரும் ரெண்டு அடையாளங்கள பாத்து வெச்சுக்கோங்க. இங்க வந்து தடவிக்கினு இருக்கக் கூடாது. டிரெஸ்ஸுக்கு வெளிய இருக்கணும். முட்டியில இருக்குது, தொடையில இருக்குதுனு துணியத் தூக்கக் கூடாது” என்று கஸ்தூரி டீச்சர் குரலிலேயே பள்ளி மாணவித் தலைவி மாரியம்மாள் பத்தாம் வகுப்பின் எல்லாப் பிரிவுகளுக்கும் சொல்லிச் சென்றாள். எல்லாருக்கும் சிரிப்பாக வந்தது. ”ஒனக்கெங்க இருக்கு… காமி” என்று எல்லாரும் அடுத்த ஆளின் அங்க அடையாளத்தையே


மனைவியின் அப்பா

 

 பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும் இல்லாத பனி மூட்டம்தான். கண்ணுக்கு எட்டிய தூரத்திலும் கண்ணுக்கு முன்னேயும் பனியே பரவி இருப்பதால், உலகம் எங்கும் பனியே மேவி உள்ளதோ எனச் சந்தேகம் வந்தது. இந்த மலையடிவார நகரத்தில் நானும் என் மனைவியுமாக வந்து இறங்கினோம். எந்த நேரமும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், பனிப்பொழிவில் கூடுதல் குளிர். ஏறக்குறைய ஒரு முழு இரவு


ஆனந்தவல்லியின் காதல்

 

 எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான, மான் கொடி பறக்கும் அரண்மனையின் உப்பரிகையில் கவலை தடவிய முகத்துடன் நின்று கொண்டிருந்த மன்னரின் பார்வை, கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்க் கப்பல்கள் மேல் நிலைகொண்டு இருந்தது. இதமான காலைத் தென்றலை ரசிக்கும் மன நிலையில் அவர் இல்லை. கவலைக்குக் காரணம், அரகதத்தின் அரசன் அநிருத்தன் அனுப்பிவைத்திருந்த ஓலை. சுந்தரபுரத்தை அரகத்தின் அடிமை நாடாக அறிவித்து


லூஸு ஓனர்

 

 தூரத்தில் ஈஸ்வரன் வருவதைக் கண்டதும் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமாகக் கணக்கு நோட்டுக்குள் ஒளித்துவைத்தேன். ”யேண்ணே… ஒரு பத்து ரூபாய்க்காக அப்போ பிடிச்சுக் கேட்டுக்கிருக்கேன். இல்லவே இல்லேண்டு சாதிக்கிறீக…’ – கடை வாசலின் வலது கோடியில் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து இருந்த வேல்கண்ணன் சடைப்புமிக்க குரலில் பேசினான். ”ஆமாடே… நானே ஒரு வாரமா வூட்டுக்கு நூறு ரூவா கொண்டுட்டுப் போக முடியாமக் கெடக்கேன். இன்னிக்கின்னு ஊர்ல இருந்து தங்கச்சி வேற வந்திருக்கு. அது


காணிக்கை

 

 அடுப்பாக நெருக்கி வைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக் கட்டியை வைத்த சாரதா, ஐயனார் கோயில் இருந்த திசையின் பக்கமாக முகம் திருப்பிக் கண் மூடி ஒரு கணம் வணங்கினாள். பிறகு, திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி, தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன் மீது வைத்தாள். ‘வாங்க சார், நாம போயி நம்ம வேலயப் பாக்கலாம்’ – எரியும் அடுப்பையே பார்த்தபடி இருந்த கணேசனிடம் சொன்னார்


வெளிச்சம்

 

 ”ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா…” எரிச்சலாக இருந்தது அவளுக்கு… ‘இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்’ என்று. ‘கிராமத்துக் கூட்டம் இப்படி வரப்போவது முன்னமே தெரிந்திருந்தால்… எங்கேயாவது தொலைந்திருக்கலாம்’ என்றும் தோன்றியது. நல்லவேளை பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். ”நீ போய் கொஞ்ச நாளைக்கு அவனோட இரும்மா. பழையபடி இருந்தா பார்த்துக்கலாம்…” – பெருசு தொடர்ந்தது. எதைப் பார்த்துக் கொள்வார்கள்? ஆம்பளை என்ற ஒரே காரணத் துக்காக அனுசரிக்க வேண்டும் என்பவர்கள்,