கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

சருகினாலும் உண்டு பயன்!

 

 குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை” என்றனர் பெருமிதத்துடன். தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, “சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டியுள்ள காட்டிலிருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். காட்டுக்குச் சென்ற சீடர்கள், அங்குள்ள காய்ந்த சருகுகளை, ‘பயனற்ற பொருள்’ என்று கருதினர். எனவே,


யார் உண்மையான சீடன்?

 

 புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர் அணுக்கத் தொண்டராக (எந்த நேரமும் குருவுடன் இருந்து, குறிப்பறிந்து அவருக்குத் தொண்டு புரிபவர்) வைத்துக் கொண்டதில்லை. ஒரு நாள் புத்த பகவான் தன் சீடர்களைப் பார்த்து, ‘‘இது வரை எனக்கு அணுக்கத் தொண்டர் எவரும் இல்லை. இப்போது முதுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்படி ஒருவர் தேவை. அப்படி என்னுடன் இருக்க விரும்புகிறவர் உங்களில் யார்?’’ என்று


ஆதிசங்கரரும் சிவபெருமானும்!

 

 காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன் எதிரே வந்தான். அவனைப் பார்த்து சங்கரரின் சீடர்கள், ‘‘தள்ளிப் போ… தள்ளிப் போ!’’ என்றனர். அந்தச் சண்டாளன், ‘‘எதைத் தள்ளிப் போகச் சொல்கிறீர்கள்… என் சரீரத்தையா? அல்லது என் ஆன்மாவையா? என் சரீரமும் சரி, தங்கள் சரீரமும் சரி… அன்னத்திலிருந்து உண்டானது. அதனால் அதில் பேதம் கிடையாது. அதைத் தள்ளிப் போ என்று சொல்லத் தேவையில்லை.


சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!

 

 புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது சீரிய தவத்தால் பரமேஸ்வரனை மகிழ்வித்து ஏராளமான வரங்களைப் பெற்றவன். இவனது வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி, கயிலை மலையைப் பெயர்த்தெடுத்ததுதான். சிவனுடைய திருவருள் பெற்று எட்டுத் திசை களையும் வென்று இலங்கையை ராவணன் ஆண்டு வந்த காலம் அது. குபேரன் ஆளும் வட திசையிலுள்ள அளகாபுரியின் மீது ஒரு முறை படையெடுத்துச் சென்றான் ராவணன். போரில் குபேரனை வென்று


தடயம்

 

 பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். வங்கியின் வாசலில் ஏறியபோது என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு கால்களின் நடுக்கத்தை உணர்ந்தாள். உணவைவிட அச்ச உணர்வுக்குப் பயண வேகம் அதிகம். வாயால் கொள்ளப்படும் உணவு வயிற்றை அடைவதைவிட, விரைவாக நெஞ்சின் பதற்றம் கால்களுக்குப் பயணப்பட்டுவிடுகிறது. வங்கிக்குள் புதிதாக நுழைபவர்களைப் போல் துவண்ட கால்களை மேல் நகர்த்தி நடந்தாள். வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர்களின் எண்ணிக்கை


பொற்கொடியின் சிறகுகள்

 

 இளங் காலையின் செறிந்த மௌனம் பொற்கொடிக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக்கொண்டது. குளிருக்குக் கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இப்படியும் அப்படியுமாக உடலைத் திருப்பினாள். சில நேரங்களில் அம்மா எதுவும் பேசாமல் இவளையே பார்த்துக்கொண்டு இருப்பார். அந்தக் கவனிப்பின் இறுதியில் அவர் கண்கள் இரண்டு படிகச் சொற்களைத் துளிர்க்கும். இவள் பார்ப்பதற்குள்ளாக முந்தானையால் அவற்றைத் துடைப்பார். ”நீ கொழந்தடி எம் பொண்ணே. ஆயுசுக்கும் நீ கொழந்தையாவே இருக்கணும்னு அந்த ஆண்டவன் எழுதிட்டான்.


வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…

 

 வங்க சாப்டலாம்…’-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன். மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு கொடுத்துவிட்டு, தனக்காக சன்னாசிக் கடையில் இரண்டு மசால் வடையை பார்சல் கட்டிக்கொண்டு வரும்போதுதான் சபாபதிக்குக் கூவலான… அதே சமயம் மெல்லிசான அந்த அழைப்பு. புரோட்டா கடையின் வாசலில் நின்று இருந்தார் கேசவன். இடப் பக்கம் இருந்த டிரம் அடுப்பில் வட்டமான பெரிய தோசைக் கல் காய்ந்துகொண்டு இருந்தது. கல்லில் வெந்துகொண்டு இருந்த ஆம்லெட்டுகளுடன் சால்னாச் சட்டி


உள் காய்ச்சல்

 

 “எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?” பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக்கொண்டு இருந்தான் திரவியம். ”ஒன்ட்டத்தானெ கேக்கென்?” சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக்கொண்டு, ”சொக்கத்தானப் பாத்துட்டு வாரென்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் திரவியம். ‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சுபோனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விள மாட்டெங்கு.


சவீதாவும் அவளது இரு அக்காக்களும்

 

 “அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற வாய்ப்பு இருப்பதாக நானும் சக ஆசிரியர்களும் பேசிக்கொண்டோம். படிப்பில் மட்டுமின்றி; ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவர் செயராமன். அவரது அகால மரணம்…” – தலைமை ஆசிரியர் உருகிக்கொண்டு இருந்தார். சில மாணவ-மாணவியர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். ‘ஒரு கணித மேதையை, கம்ப்யூட் டர் நிபுணரை, ஐ.ஏ.எஸ். அதிகாரியை நாடு இழந்துவிட்டது. இப்போது நாம் கண் மூடி, அவருடைய


மல்லிகா அக்கா

 

 “டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான் சொல்றத நம்புவீங்க. அய்யம்பேட்டைதான் எங்க ஊரு. குடமுருட்டி ஆத்துல சுழிச்சுக்கிட்டு ஓடுற தண்ணி, படித்துறை அரச மரத்தடிப் பிள்ளையாரு, அவரு தலைல எப்பவுமே இருக்குற மஞ்ச கலர் ஊதாங்குழல் பூ, சுடுகாட்டுக்குப் போற பாதை ஓரத்துல வேலிக் கொடியில தொங்கற கோவக்கா, செவப்பா தாமரையும் வெள்ளையா அல்லியும் பூத்திருக்குற