கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

 

 முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம். மறு நாள், ”ஸ்வாமி, நேற்று


மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

 

 இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!”


‘குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!’

 

 பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் புராணங்களில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தக் கர்ணபரம்பரைக் கதை… ‘பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும், அவர்களுக்கு தேசத்தை திருப்பித் தர மாட்டோம்’ என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் தூதராகச் சென்று, துரியோதனனைச் சந்திக்க முடிவு செய்தார் கிருஷ்ணர். பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர், கிருஷ்ணரைத்


மாலிகன் மதி இழந்த கதை!

 

 கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன். யார் இந்த மாலிகன்? யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்! எனவேதான் அவனுக்கு, சகல


யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!

 

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது. ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும்


சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

 

 ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச விரும்பினார் எமதர்மன். ராமனும் அனுமதியளித்தார். இதையடுத்து, முனிவர் வேடத்தில் அயோத்திக்கு வந்த எமதர்மன் அரண்மனைக்குச் சென்று ராமனை சந்தித்தார்: ”மகா பிரபு, தங்களது அவதாரம் குறித்து ரகசியமாகப் பேச விரும்புகிறேன். எனவே, தங்களைத் தவிர வேறு எவரும் இங்கு இருக்கக் கூடாது. ஒரு வேளை… நாம் பேசும்போது எவரேனும் உள்ளே நுழைந்தால், அவர்களை தாங்கள் சிரச்சேதம்


ஊர்வசியின் சாப விமோசனம்!

 

 சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன். ஒரு முறை, சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசித்திருந்த ஊர்வசி எனும் தேவலோக மங்கை யைச் சந்தித்தான் புரூரவன். அவளின் பேரழகு புரூரவனைக் கவர்ந்தது. அவளிடம், ”உன்னை மணக்க விரும்புகிறேன்!” என்றான். ஊர்வசிக்கும் அதில் விருப்பம்தான். எனினும் மூன்று நிபந்தனைகள் விதித்தாள். ”மன்னா… நான் இரு ஆடுகளை என் குழந்தைகளாகக் கருதி வளர்க்கிறேன். அவை, எப்போதும் எனது


சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!

 

 ”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலை மீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் அவன் உடைமைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ கட்டித் தந்த மண்டபத்தில் இருக்கும் நான், உனக்குச் சொல்வது இதுதான். சொன்னதைச் செய்யம்மா!” – இஸ்லாமியத் துறவியான வாலர் மஸ்தானின் இந்த வார்த்தைகள்


கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!

 

 என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன், கோயில் கொண்டிருக்கும் இடமே பண்டரிபுரம். இங்கு, வைராக்கிய சீலரான ராக்கா, தன் மனைவி பாக்கா மற்றும் மகள் பங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். மண்பாண்டங்கள் தயா ரித்து விற்பதே இவரது தொழில். ஒரு நாள், வழக்கம் போல் சூளை போடும் பணியில் ஈடுபட்டார் ராக்கா. மண்பானைகளை முறையாக சூளையில் அடுக்கிக் கொண்டிருந்தார். பானை ஒன்றில் சில


கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!

 

 பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்; தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன். தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து