கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 27, 2013

17 கதைகள் கிடைத்துள்ளன.

மயிலாம்பு!

 

 “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். அறுப்பரிவாளும், டீ கூஜாவுமாய் அபூர்வம் வாசலில் நின்றிருந்தாள். “”ஊரெல்லாம் அறுப்பு அறுக்குது, நீங்க வரலை?” என்றாள். “”காலம்பற சீக்கிரமா எந்திருக்கணும்னு நெனச்சுத்தான் படுத்தேன். என்னமோ ரோசனை; பாதி ராத்திரிவரைக்கும் தூக்கமே வரலை. எப்ப கண்ணசந்தேனோ தெரியலை, நல்லா தூங்கிட்டேன். ஓங்கொரல் கேட்டோனோ பாயக்கூட சுருட்டலை. இரு இதோ வந்துட்டேன்” என்று உள்ளே ஓடி பாயை


அங்கீகாரம்

 

 பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின் அழுத்தமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். என்றாலும், அவுட்டோர் வந்த இடத்தில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் லாட்ஜின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு டயலாக் சொல்லிக்கொடுப்பது யூகத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருந்தான். அதனால்தான் கதவை திறந்து வைத்தான். ஆனால் அதற்கு அர்த்தம் இல்லாதது போலிருந்தது நாயகி ராகினியின் பார்வை. அவனைத்தின்று விடுவது போல பார்த்தாள். கண்களில் கள்ளம். கையில் இருந்த


தாகம்

 

 செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது “கனவு இல்லம்’ என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. அரை பர்லாங் தூரம் போனால் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். அந்தக் கட்டடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் பயணம் நீண்ட பயணம்தான். பீகாரிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கோ, டெல்லிக்கோ போவதுகூட நீண்ட பயணம் என்று நினைக்கிறவள் அவள். ஆனால் செüதாமினியைத் தமிழ்நாடு வரைக்கும் யார் துரத்தியது? ரொம்ப தூரம்தான் வந்துவிட்டாள். “கனவு இல்லத்தை’ மறுபடியும்


பரமேஸ்வரியின் குடிசை

 

 நான், முகுந்தன், ரவி மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினோம் என்று முதலிலேயே சொல்லிவிட்டுத் தொடங்கினால் எங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்று நினைக்கிறேன். காரணம் தலை போகிற தவறு இல்லையென்றாலும், “படிக்கிற வயசுல இப்படியெல்லாம் பண்ணலாமா’ என்று கேட்டுவிடக் கூடாது என்பதால்தான். அப்படி என்ன செய்துவிட்டோம் என்கிறீர்களா? “ஒரு மரத்துக் கள் உடம்புக்கு நல்லது’ என்று பள்ளியின் வாட்ச்மேன் சொல்லப்போக, குடித்தால்தான் என்னவென்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரமேஸ்வரி அக்காவின் குடிசைக்குப்


சங்குத் தேவனின் தர்மம்

 

 முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமையனின் ஐசுவரியத்தினாலோ கோடீசுவரியாகி விடவில்லை. வறுமையில் குசேலரின் தமக்கை. சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடு வித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந் தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம். நமது இந்து சமயத்தின் பழைய உலர்ந்துபோன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம்


நீர்க்கொடி

 

 நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கனவில் காட்சியைவிட ஓசையே மேலோங்கி இருந்தது. பொழுது விடிந்து வெகு நேரத்திற்குப் பின்னும் சங்கிலிச் சகடையின் ஒலி அதிர்வுகள் கசிந்தபடியே இருக்கின்றன. இப்போது என்றில்லை. எப்போதுமே இப்படித்தான். வனஜாக்கா வரும் கனவுகளில் உருவங்களை விட ஓசையே தூக்கலாக இருக்கிறது. கிணற்றடியில் சகடை உருளும் ஓசை. ஒருவேளை சகடைச் சத்தம்தான் வனஜாக்காவின் ஒலி வடிவமாக


தாத்தா

 

 இரவானால் போதும் “அப்பா! அப்பா!’ என என்னை ஏலம்போட ஆரம்பித்துவிடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும். வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது, கேட்டது, பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாநில அரசுகளின் நிலையில்தான் நானுமிருந்தேன். “”அப்பா, சீக்கிரமா வர்றீங்களா இல்லியா?” எனக் கூப்பாடு போட்ட கையோடு,””இந்த அப்பா ரொம்ப மோசம். வர, வர ரொம்பத்தான் பிகு பண்றாரு”


மரணம் எனும் ஜனனம்

 

 நீர்க்குமிழியின் வட்டத்துள் தான் ஈன்ற ஆசாபாசங்கள் வந்து எட்டிப் பார்ப்பதை தன்னால் உணர முடிகிறது. பேச நா எழவில்லை. முதல் தொப்புள் கொடி அறுத்த மூத்த மகன் நெஞ்சு வலியோடு வந்து நின்னு கண்ணீர் வராது வற்றிப் போய் தன்னைப் பார்ப்பது ரொம்பவும் அவஸ்தையாயிருக்கிறது. “கவலைப்படாதே… நீ காலத்தோடு முந்தி நிற்பாய்’ என்று கைகளால் ஆதரவுடன் தொட்டுப் பேச மனசு துடிக்கிறது. காலக் கொடுமை என் மூக்கில் மூன்று நான்கு பெரிதும் சிறிதுமான குழாய்கள். வாய் வழியே


அண்டங்காக்கை

 

 என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு நிற பாத அணிகளோடு ஒரு பாறையின் மீது நெப்போலியன் நின்று கொண்டிருக்கும் படம் ஒன்றை நெவாவில் கண்டேன். அதைப் பார்த்ததுமே பொக்தனோவின் துருவப் பயணத்தில் வரும் ஒரு படம் என் நினைவுக்கு வந்ததால், நான் குபீரென்று மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டேன்; ஏனெனில் நெப்போலியனின் தோற்றம் பெங்குவின் பறவையைப் போலிருந்தது. அதே சமயம், “”என்னுடைய அப்பா அண்டங்காக்கையைப்


குங்குமச் சிமிழ்

 

 தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார். இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வாள்.