கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 25, 2013
பழிதீர்ப்பவன்
Мститель : பழிதீர்ப்பவன் மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான்.”குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில்
கொடியவர்கள்
Злодеи : கொடியவர்கள் மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் தமிழில் : மா. புகழேந்தி 1 அதிகாலையில், விடிவதற்கும் முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லோரும் துயில் எழுந்து, விளக்கேற்றி இருந்தனர். ஜன்னலுக்கு வெளியே இன்னும் இரவின் நீல நிறம் வானில் எஞ்சியிருந்தது, ஆனாலும் விடிவதை அறிவிக்க வெளுத்துக் கொண்டிருந்தது. குளிராக இருந்தது, அவளது முழு உடலும் நடுங்கியது, அவளிடம் ஆழ்ந்த சோகம் கப்பியிருந்தது. அதுதான் அவளை அதி காலையிலேயே எழுப்பி இருக்கக் கூடும். உணவறையில்
நல்ல முடிவு
Хороший конец : நல்ல முடிவு மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா , சொல்லக்கூடிய அளவுக்கு, சற்றே கொழுகொழுப்பான பெண்மணி, நாற்பதைத் தொட்டிருப்பவர், திருமண ஏற்பாட்டாளர், அது மட்டுமல்லாது காதும்காதும் வைத்தது போல சொல்லக் கூடிய பல வேலைகளைச் செய்பவர். தற்போது ஸ்டைட்ச்கின், ரயில்வே தலைமைக் காவலர், விடுமுறையில் இருக்கும் ஒரு நாளில் அவரைக் காண வந்திருந்தாள். ஸ்டைட்ச்கின், ஓரளவுக்குப் பரபரப்பாக, ஆனால், எப்போதும் இருப்பது போல இறுக்கமான
ஆனந்தம்
Счастье : ஆனந்தம் மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் தமிழில் : மா. புகழேந்தி ஷாஷா, ஒரு விலை மகள், ஒரு காலத்தில் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அவளது முகம் இப்போது பொலிவிழந்து கன்னம் ஒட்டி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளது வாழ்க்கை, வாழ்க்கை என்று சொல்லிகொள்ளும் அனைத்தையும் இழந்திருந்தது.அது ஒரு கொடுமையான பிழைப்பாகவே இருந்தது. கொடுமையான நாள். பகல் தனது வெம்மையையும் வெளிச்சத்தையும் மெல்ல மெல்ல இழந்து, நம்பிக்கையற்ற இரவில் கரைந்தது, இரவோ முடிவே
வண்ணானின் நாக்கா அழுக்கு?
அரண்மனையே பேச்சற்று உறைந்து கிடந்தது.தீயின் நாக்கு நீருபித்தத் தூய்மையை வண்ணானின் நாக்கு அழுக்காக்கி விட்டதாக எங்கும் பேச்சு. செய்தியறிந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஊர் வாயை மூட வழி தேடியறிந்தவர்கள் தாமே ஊர் வாயானார்கள். செவிலிப் பெண்கள் சீதையும் இராமனும் வந்த பிறகு திரும்பப் பெற்ற இளமையை மீண்டும் தொலைத்துவிட்டார்கள்.இலையுதிர்கால மரங்களைப் போல, வீரர்கள் களையிழந்து போனார்கள். இராமராஜ்ஜியக் கனவுகள் கண்முன் சிதைந்து போவதைக் கையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் வசிட்டர்.தேரோட்டி சுமந்திரனோ இராமனின் கண்களில் பட்டுவிடாமலிருக்க எங்கோ