கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 15, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தேகக் கோடு…….அது சந்தோஷக் கேடு……

 

 கல்லூரியில் கணிப்பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தாள் ராஜி. அந்தக் கல்லூரியில் அவள் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது. அன்று, மாதத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. இளங்கலை மாணவர்கள் தேர்வெழுதும் அறைக்கு கண்காணிப்புப் பணிக்குச் சென்றிருந்தாள்.மாணவர்கள் அனைவருக்கும் விடைத் தாட்களையும், வினாத் தாட்களையும் கொடுத்துவிட்டு அமர்ந்தாள். சிறிது நேரத்தில், துணைத் தாட்கள் கேட்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் எழ, அனைவருக்கும் கொடுத்துவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்தாள். மாணவர்களிடம், யாரும் காப்பி அடிக்க முயற்சி பண்ணாதீர்கள் என்று அறிவுறுத்தினாள். கண்காணித்துக்


அவளும் அவனும்

 

 1 “விளக்கை அணைச்சுடட்டுமா?” வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அது ஊர ஊர, அவள் உள்ளங்கை குறுகுறுத்தது. ஒரு லைட்டைப் போட்டுப் போட்டு அணைப்பது போல், மின்மினியின் வால்புறத்தில் மிளிர்ந்து அணையும் ஓர் ஒளித்துளி. திரும்பிய வினயாவின் முகவெட்டுத் தோற்றத்தில் ஒரு செல்லக் கோபம். இகழ்ச்சி. ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’ “ஏய்.. வௌக்கை அணைச்சா மின்மினி எஃபெக்ட் நல்லாத் தெரியும்னு சொன்னேன்.” வைபவிகண்களைத் திருப்பி வினயா


ஒரு பவுண்ட் எத்தனை கனம்?

 

 வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப நாலைந்து வழிகள் இருந்தன. இன்டர்நெட் மூலமாக அனுப்புவது அதில் ஒரு வழி. நண்பர்கள் ஒரு சில வெப்சைட்களை பரிந்துரைத்திருந்தார்கள். ரிவ்யு வெப்சைட்களில் பெரும்பாலும் ஒரே விஷயம் தான் திரும்ப திரும்ப சொல்லபட்டிருந்தது. பணம் அனுப்பினேன், பத்து நாளாகியும் இந்திய கணக்கில் சேரவில்லை என்பதுதான் அது. இதையெல்லாம் படித்த பிறகு வரும் குழப்பமென்பது தேர்தலில் யாருக்கு ஒட்டு போடுவது என்று வரும் குழப்பத்துக்கு சமமானது. குற்ற குணாதிசயங்களில்


சமூக தண்டனை

 

 அந்த பேரூந்தில்; ஆறு மிருகங்கள்; ஒரு பூவையிடம் வெறித்தாண்டவமாடி, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் பிணமாகிப்போன,… அந்த கோரசம்பவத்தின் முழுநீள விளக்கமான ‘ரிப்போர்ட்’ தயாரிக்கும் பொறுப்பு ‘இன்வெஸ்டிகேட்டிவ்-ஆபீஸ’ரான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பயணிகள் பேரூந்தென்று நம்பி ஏறிய தப்பைத் தவிர வேறொன்றும் செய்யாத அந்த இளம்பெண் பட்ட அவஸ்தையை, சித்ரவதையை ‘பாக்கிஸ்தான்’ வசம் சிக்கிக்கொண்ட இந்திய இராணுவவீரன் கூடபட்டிருக்க மாட்டான். கற்பழிக்கப்பட்ட பிறகு அடிவயிற்றிலும், தொப்புளிலும் இரும்புக்கம்பியைத் திருகி ஏற்றி…….நினைக்கவே கடினமாக இருந்தது. என்னால் ரிப்போர்ட் எழுத முடியவில்லை. நரம்பெல்லாம் முறுக்கேற,


பச்சை நிறமே இல்லை

 

 புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும். சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார். சற்று தொலைவில் ஒரு டீக்கடையில் லேப்டாப்பில் செய்திகளை படித்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்ற சுகவனம் தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார்