கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 8, 2013
உந்துதல் (அ) ’சடையன்’
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக் கொண்டிருந்தனர்.. சிலர் சந்தோஷத்தில் குதிப்பதும், சிலர் சோர்ந்து நிற்பதுமாக…., பொதுவாக எங்கும் ஒரே கூச்சலாயிருந்தது. இன்று ஒருநாள் எல்லா செல்போன்களும் முழு வீச்சில் கூடுதல் நேரம் வேலை செய்யப் போகின்றன. எங்கும் பரபரப்பு. அடுத்த கேள்வி, மாநிலத்தில் முதல் மார்க் எவ்வளவு?.எந்த ஊர்?.,எந்த பள்ளி?, யார் எடுத்திருக்கிறது?. எங்கள் நிரூபர்கள் குழு பறந்துப் பறந்து தேட,
கைகேயி பிறந்த கதை!
கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. சற்று விரிவாகவே பார்ப்போம். கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர (விளக்கம் பின்னால்
இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை, மக்கள் போற்றிக் கொண்டாடினர். நாளடைவில் அவரது புகழ் வேற்று நாடுகளுக்கும் பரவியது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டான் அரசன். புலவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து, கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்துவது அரசனது வழக்கமாயிற்று. ஆனால், புலவர் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல்
அறிவுரை சொன்ன பறவை!
மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை
சாதுவாக மாறிய ராட்சசன்
புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள். ஓர் ஆசாமியைக் கொன்றதும் எண்ணிக் கைக்காக, அவரது விரலை வெட்டிக் கழுத்து மாலையில் கோத்துக் கொள்வான். அப்படி, 999 விரல்கள் அவனது மாலையில் இடம்பெற்றுவிட்டன. அங்குலிமாலனுக்கு பயந்து அவன் வசிக்கும் பகுதிக்கு ஊர்மக்கள் செல்வதே இல்லை. ஒரு நாள் புத்தர் அந்தக் காட்டு வழியே செல்ல முற்பட்டார். மக்கள் அவரை எச்சரித்து, ‘‘அந்தப் பக்கம் செல்லாதீர்கள்!’’
பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!
பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில் சிதிலம் அடைந்திருந்தது கண்டு கோபண்ணா மனம் வருந்தினார். ஆகவே, மக்களிடமிருந்து வசூலித்த வரிப் பணம் ஆறு லட்சம் வராகன்களைக் கொண்டு, ராமர் கோயிலுக்கு மராமத்துப் பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார். வரிப் பணத்தில் கோயில் பணிகள் செய்ததைக் கேள்விப்பட்ட மன்னன் தானீஷா, கோபண்ணாவைக் கைது செய்ய உத்தரவிட்டான். வீரர்களும் கைது செய்து அவைக்குக் கொண்டு வந்தனர்.
சருகினாலும் உண்டு பயன்!
குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை” என்றனர் பெருமிதத்துடன். தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, “சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டியுள்ள காட்டிலிருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். காட்டுக்குச் சென்ற சீடர்கள், அங்குள்ள காய்ந்த சருகுகளை, ‘பயனற்ற பொருள்’ என்று கருதினர். எனவே,