கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 6, 2013

53 கதைகள் கிடைத்துள்ளன.

வெளிச்சம்

 

 ”ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா…” எரிச்சலாக இருந்தது அவளுக்கு… ‘இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்’ என்று. ‘கிராமத்துக் கூட்டம் இப்படி வரப்போவது முன்னமே தெரிந்திருந்தால்… எங்கேயாவது தொலைந்திருக்கலாம்’ என்றும் தோன்றியது. நல்லவேளை பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். ”நீ போய் கொஞ்ச நாளைக்கு அவனோட இரும்மா. பழையபடி இருந்தா பார்த்துக்கலாம்…” – பெருசு தொடர்ந்தது. எதைப் பார்த்துக் கொள்வார்கள்? ஆம்பளை என்ற ஒரே காரணத் துக்காக அனுசரிக்க வேண்டும் என்பவர்கள்,


ஐந்தாவது பெண் !

 

 சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப் பிடிக்கவில்லை என்கிற தகவலை அம்மா போனில் சொன்னாள். என்ன காரணம் என்று ரத்தம் கசியும் மனதுடன் கேட்டதற்கு, ”அந்தப் பொண்ணு கம்ப்யூட்டர்ல வேலை பாக்கிற ஆளுதான் வேணும்னு சொல்லிருச்சாம்” என்றாள் அம்மா. ”இந்த தை மாசத்துக்குள்ளயாவது உனக்குத் தகைஞ்சிரும், பங்குனியில கல்யாணத்தை முடிச்சிரலாம்னு இருந்தேன். ஆனா, சோசியக்காரன் சொன்னான்… உனக்கு ஏழுல செவ்வாய், குரு நீச்சமாயிருக்குனு.


வள்ளி அத்தை

 

 தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்… வள்ளி அத்தை! தீபாவளிக்கு முன்னமே எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள் வள்ளி அத்தை. அதற்கான முன்னேற்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது, நான்தான். ”சாரு… வள்ளி அத்தை வரப்போவுது. வீட்டை ஒட்டடை அடி, புத்தகத்தை எல்லாம் அடுக்கி வை…” என்று அம்மாவும், ”சாரு… தோட்டத்தை எல்லாம் சுத்தப்படுத்தக் கூடாதா… வள்ளி அத்தைகிட்டே திட்டு வாங்கிட்டுத்தான் செய்யணுமா..?” என்று அப்பாவும் பரபரப்பார்கள். ”வள்ளி அத்தை வருதுனா… ஏம்மா அப்பாவும்


வைபவி…

 

 பைக்கை விட்டு இறங்கி, மது வீட்டின் உள்ளே நுழைந்தபோது, ”இங்க கொடுப்பா…” என்று அவனுடைய கைப்பையை வாங்கிக் கொண்டாள் அம்மா சொர்ணம். உடை மாற்றி, முகம் கழுவி, ரிலாக்ஸ்டாக அவன் ஹாலில் உட்கார்ந்தபோது… இரவு ஒன்பது மணி! ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான் மது. மாதச் சம்பளம் ஒன்றரை லட்சத்துக்கும் மேல். அழகான இளைஞன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை. அப்பா, வங்கி அதிகாரி. அம்மா, குடும்பத்தலைவி. சூடான ரொமாலி ரொட்டியுடன் பாலக் பனீரையும் எடுத்து வந்த சொர்ணம்,


தொலைந்து போன தூக்கம் !

 

 அந்தச் செய்தியைக் கேட்டபோது… நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப அழுக்கான ஜீன்ஸில், பிராண்டட் டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞன், படு வேகமாகப் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தான். ”ஹெல்மெட் போட்டுக்கலியா?” என்று கேட்டவாறே அவனைக் கடந்தபோது, கண்களில் துளிர்க்கப் பார்த்த நீரை அடக்கினேன். ‘முன்பின் தெரியாத இந்தப் பெண் நம்மை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறாள்?’ என்று தோள் குலுக்கியிருக்கலாம் அவன். காருக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கொஞ்சம்


லூசுப் பெண்ணே…

 

 தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை. சென்னைக்கு வந்துவிட்டேன். நண்பனின் உதவியால், பெரும்பான்மையானவர்கள் போல, படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. சிங்காரச் சென்னையின் நவ நாகரிகப் பெண்கள், தங்கள் காதலர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஓருடலாக விரைந்து செல்லும் காட்சிகள், பலரைப் போல் என்னையும் ஏங்க வைக்கத்தான் செய்தன. குடும்ப சூழ்நிலை, வருமானம்… இதெல்லாம் முன்னே வந்து,


பச்சைப் புறா

 

 அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க வைத்து, போர்வை போர்த்தி விட்டு நிமிர்ந்தபோது, எனக்கே நோய் கண்டவள் போன்ற அசதி உண்டானது. ஏழு மாதங்களாக அம்மாவும், நானும் இப்படித்தான் அப்பாவுக்கு கையாகவும், காலாகவும் இயங்குகிறோம்! அயர்ந்து நாற்காலியில் சரிந்தபோது, போன் அழைத்தது. “அம்மணீ! பச்சப் புறா வேணும்னு கேட்டீங்களே! கொண்டாந்திருக்கேன். வீடு எங்க இருக்கு?” பேசியது அஞ்செட்டி வேட்டைக்காரர். அப்பாவுக்கு மருந்துக்காக பச்சைப்


மித்ர தோஷம்!

 

 ”குமார்… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து வர்றாங்க. எனக்கு ஒண்ணும் ஓடாது. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருக்கும். வர்றியாடா?” – பரமேஸ்வரன் போனில் கேட்டார். குமார் சிரித்துக் கொண்டார். ”உன் மகளைத்தானே பொண்ணு பார்க்க வர்றாங்க. உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்ற மாதிரி படபடப்பா இருக்கியே! சரி… சரி… காலையில ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடறேன்…. ஸாரி, வந்துடறோம். சுலோசனாகிட்டே டிபனுக்கு புதினா சட்னி அரைச்சு வைக்கச் சொல்லு!” – போனை வைத்துவிட்டு அமர்ந்தார் குமார். வாழைப்பூ அரிந்து


பொங்க சீர்

 

 சின்னச் சின்ன கருவேலங்கன்றுகளை குழிகளில் வரிசையாக நட்டுக்கொண்டிருந்தான் ஜெயபாலு. “பொண்ணுக்கு பொங்க சீர்வரிச வைக்க சாமாஞ்செட்டு எடுக்கப்போயிருக்கு உங்கம்மா. ம்… எது தவறினாலும் உங்க தங்கச்சிக்கு பண்டிகைக்குப் பண்டிகை சீர் தவறதில்ல…” – குழிகளில் தண்ணீர் ஊற்றும்போதே சேர்த்து போதித்தாள் கோமளா. வீட்டில் தனித்துப் பிறந்தவள் என்பதால், இங்கே மலருக்கு சீர், செனத்தி செய்வதைப் பார்த்தாலே கோமளாவுக்குப் பற்றிக் கொண்டுவிடும். ஆனாலும், ஜெயபாலுக்கு மனைவி சொல்லே மந்திரம். “ம்… உரம் வாங்கணும்னு 500 ரூபா கேட்டேன். பதிலே


வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு

 

 வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும் நிறுத்தி மீன் குழம்பு வைக்கச் சொன்னாலும், வயிராத்தா குழம்புக்கு ஈடாக, ஒரு ஓரம்கூட வர மாட்டார்கள். மீன் குழம்பு என்றில்லை… அவள் ஒரு குப்பைக் கீரையை வதக்கி வைத்தாலும் வாசனையும் ருசியும் ஆளைத்தூக்கும் என்று எங்கள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேரும் சத்தியம் செய்வோம். வயிராத்தா கைப்பக்குவத்துக்காகவே லீவுக்கு வீடு செல்லாமல் விடுதியில் தங்கிவிடும்