கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 3, 2013

13 கதைகள் கிடைத்துள்ளன.

அவர் பெயர் முக்கியமில்லை

 

 அந்த இளைஞன் துர்காவை மறுபடியும் கடந்து சென்றான். காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த அரை மணி நேரத்துக்குள் அவனை மூன்று முறை பார்த்து விட்டாள். அந்தப் பையனுக்கு 20 வயது இருக்கக்கூடும். வெளிறிய ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தான். இடது கையில் ஒரு பித்தளைக் காப்பு. இவனைப் போன்ற பையன்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹாம்சன் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக வீடு எடுத்துத் தங்கி இருப்பவர்கள். அவளது வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள பிள்ளையார் கோயிலை ஒட்டிய வீட்டில்கூட கல்லூரி


ஒரு சதுரங்கம்

 

 மழைதான் இப்படி எல்லாம் செய்யும். ஏற்கெனவே ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயத்தில், அந்த ஆட்டோவைக் கையைக் காட்டி நிறுத்தினேன். ”அன்பு நகர், ஹவுஸிங் போர்டு போகணும்” என்று சொன்னேன். வருமா, எவ்வளவு ஆகும் என்று எல்லாம் கேட்கவில்லை. ஆட்டோக்காரர் பதில் சொல்லாமல், அரை வட்டம் அடித்துத் திரும்பி வந்து ‘ஏறுங்க’ என்பதுபோலப் பின் கதவைத் திறந்துவிட்டார். ”தாத்தாவைப் பாருங்க. மழையோடு மழையா, குடையைப் பிடிச்சுக்கிட்டு வந்து தபால்பெட்டி யில் லெட்டர் போடுறதை…” என்று எதிர்ப்


கோட்டை காவல் நிலையம்

 

 போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான். கையெழுத்து போடுவதற்கு இன்னும் பத்து நிமிஷங்கள்தான் இருந்தன. முன்னதாகப் போனால், எஸ்.ஐ.விநாயகம் கர்புர் என்று கத்துவான். ‘கோர்ட்டுல என்னால சொல்லியிருக்கு… பத்து மணின்னுதானுல போட்டிருக்கு… கா மணி நேரத்துக்கு முன்னால கால அகட்டிட்டு ஓடி வந்துருக்கே…’ அங்கு இருக்கும் மற்ற எல்லோருமே எள்ளலாக சரவணனைப் பார்வை பார்க்க, இவனுக்கு உடல் கூசும். ‘திருப்பி உள்ள தள்ளிரலாமாவே?’


நினைவின் நிழல்

 

 நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள். உடலில் ஓர் அசைவும் இல்லை. பத்து குதிரைத் திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தைபோலக் கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக நீண்ட யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவால்


கனவான்களின் ஆட்டம்

 

 இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா! ’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள். நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள்,